- Thursday
- May 7th, 2026
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அக்குழுவின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று சு.க.வின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எம்.ஆரியசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்த்திருத்தும் வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா...
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி அடையாளக் கம்பத்துடன் மோதுண்டு மயங்கிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கு அண்மையாக இடம்பெற்ற இந்த விபத்தில் அளவெட்டியைச் சேர்ந்த எஸ்.தர்சன் (வயது 19) என்ற இளைஞரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவராவார். உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் நீண்டநேரமாக மயக்கம்...
இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஒளடதங்கள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையும் அதன் அடிப்படையில் ஒரு சுதந்திரமான அதிகாரசபை அமைக்கப்படுவதையும் தாம் மனப்பூர்வமாக வரவேற்பதுடன் இது சீரான முறையில் அமூல்படுத்தப்படுவதன் மூலம் இலவச மருத்துவ சேவையில் வரப்பிரசாதங்கள் முழுமையாகக் கிடைக்க வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
வடமாகாணத்திலுள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு விடுதிகள் அமைப்பதற்காக இந்த வருடம் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன் திங்கட்கிழமை (09) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் வருடாந்தம் கால்நடை வைத்தியர்களுக்குரிய விடுதிகள் அமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் 4 விடுதிகளும் கிளிநொச்சியில் 2...
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைக்கவசம்(ஹெல்மட்) அணியும் சட்டத்தை உடன் அமுல்படுத்தவேண்டாம் என்றும் அச்சட்டத்தை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார். இந்த சட்டம் இம்மாதம் 21ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்....
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இந்தியப் பெண் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டமையை இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் கண்டித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிக்பெரிய நகரமான சிட்னியில் பூங்கா ஒன்றில் பிரபா அருண் குமார் என்ற பெண் சனிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் ஆஸ்திரேலியப் பொலிஸார் யாரையும் இதுவரைக் கைதுசெய்யவில்லை. ஆனால், இனத்துவேஷத்துடன் சம்பந்தப்பட்ட தாக்குதலாக இதனைக் கருதுவதற்கான...
சூரியசக்தியில் இயங்கும் விமானம் ஒன்று உலகைச் சுற்றிவரும் அதன் ஐந்து மாதப் பயணத்தில் முதல்கட்டத்தில் உள்ளது. ஒரு துளி எரிபொருளையும் பயன்படுத்தாமல் தனியே சூரிய சக்தியை மட்டுமே கொண்டு இந்த விமானம் இயங்கக்கூடியது. சோலார் இம்பல்ஸ் டூ- என்ற பெயருடைய இந்த விமானம் தனியொரு நபர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடியது. அபு தாபியிலிருந்து ஒமான் நோக்கி...
தஞ்சம் கோரி வருபவர்களை ஆஸ்திரேலியா நடத்தும் விதம் குறித்து ஐநாவின் சித்ரவதைகளுக்கான சிறப்புத்தூதுவர் கூறியிருக்கும் கருத்துக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நாட்டுக்கு வெளியேயான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படும் விதம், சித்ரவதை குறித்த சர்வதேச சட்டங்களை மீறுவதாக இருப்பதாக ஐநா கூறியுள்ளது. மனுஸ்...
மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே முன்றலில் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, காமன்வெல்த் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் தமிழ்...
நேற்று முன்தினம் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது வாலு படத்தை தனது அம்மாவுக்கும், நண்பர்களுக்கும் ஸ்பெஷலாக திரையிட்டு காட்டினார் சிம்பு. எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் வாலு படத்தை இயக்கியுள்ளார். சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள இப்படம் இந்த மாத இறுதியில் – 27 ஆம் தேதி – வெளியாகிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு...
ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ‘36 வயதினிலே’ என்று சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். திருமணத்துக்கு பிறகு ஜோதிகா நடிக்கவில்லை. நல்ல கதைகள் அமைந்தால் அவர் மீண்டும் நடிப்பார் என்று சூர்யா கூறி வந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் மஞ்சுவாரியார் நடித்து வெற்றிகரமாக ஓடிய ’ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் கதை இருவருக்கும் பிடித்து...
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் அனிருத் சிறப்பு தோற்றத்தில்...
வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின், வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் வவுனியா, செட்டிகுளம், பிரமணாலங்குளம் பகுதியில் பேக்கரி ஒன்று...
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவவீரர்கள் 10 பேருக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு சம்பளத்தை வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவரை குற்றமற்றவர் என்று இனங்கண்டே நீதிமன்றம் அவரை இன்று திங்கட்கிழமை...
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் எதிர்வரும் 25ஆம் திகதிவரை மக்கள் மீள்குடியேற வேண்டாம் என்று புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது அந்த மக்களை குடியேறவேண்டாம் என்று பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்....
இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற 29 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீல்ரூக்சி ஹந்துன்நெத்தி என்ற ஊடகவியலாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 45 பெண்களில் 13 பெண்கள் (28.8%) தாம் வேலைத்தளங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகவேண்டியிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர் என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்...
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, தான் இந்த வருடம் ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றிற்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் வடமாகாணத்துக்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழுவில் பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும், வெளிவிவகார அமைச்சைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருப்பர். இந்தியப் பிரதமர் இரு நாள் பயணமாக எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்புக்கு வருகிறார். இந்தப் பயணத்தின்போது வடபகுதிக்கும்...
வடபகுதி மக்களைச் சந்திப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் வடக்குக்கு வருகை தரவுள்ளார். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு முதன்முறையாக வந்திருந்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தையும், யாழ்.மாவட்ட வெயலகத்தில் நடத்தியிருந்தார். இந்த நிலையில் தேர்தலில் மாற்றத்துக்காக வாக்களித்த வடபகுதி மக்களைச் சந்தித்து...
Loading posts...
All posts loaded
No more posts
