Ad Widget

ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பது எமது கடமை – சம்பந்தன்

இலங்­கையில் காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையில் ஒரு­வ­ருக்கும் நம்­பிக்­கை­யில்­லா­விட்­டாலும், அதில் தமது முறைப்­பாட்டை பதிவு செய்­வது கடமை என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

sambanthan 1_CI

இலங்கை வந்­தி­ருக்கும் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ராஜை சனிக்­கி­ழ­மை­யன்று சந்­தித்துப் பேசி­யது குறித்து, பி.பி.­சிக்கு அளித்த பிரத்­யேக செவ்­வி­யின்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­விக்­கையில்;

ஆணைக்­கு­ழுவினை புறக்­க­ணிக்கும் நிலைப்­பாட்­டுடன் எனக்கு உடன்­பா­டில்லை.இந்த ஆணைக்­கு­ழுவின் மீது ஒரு­வ­ருக்கும் நம்­பிக்கை இருக்­கலாம் அல்­லது இல்­லா­மலும் இருக்­கலாம். ஆனால் அந்த ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையில் கலந்­து­கொண்டு சாட்­சி­ய­ம­ளிப்­பது கடமை என்று குறிப்­பிட்டார்.

இதே­வேளை, சுஷ்­மாவை சந்­தித்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்புத் தலை­வர்கள், இனப் பிரச்­சி­னைக்கு வடக்கு, கிழக்கு இணைந்த பிர­தே­சத்தில் அர்த்­த­முள்ள அதி­காரப் பர­வ­லாக்­க­லுடன் கூடிய அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு இந்­தியா உதவ வேண்டும் என்று கோரி­யி­ருக்­கின்­றனர்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­திரன், சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் இந்தச் சந்­திப்பில் கலந்து கொண்­டனர்.

புதிய அர­சாங்கம் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக தெரி­வித்­துள்ள போதிலும், அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை இன்னும் எடுக்­க­வில்லை என்று கூட்­ட­மைப்­பினர் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் எடுத்துக் கூறி­யுள்­ளனர்.

மீன­வர்­களின் பிரச்­சி­னையைத் தொடர்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது என்றும் அதற்கு உட­ன­டி­யாகத் தீர்வு காண வேண்­டி­யதன் அவ­சியம் பற்­றியும் இந்தச் சந்­திப்பின் போது வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணாமல் போன­வர்கள் விவ­காரம் என்­பன குறித்தும் இந்தச் சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts