Ad Widget

சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்தார்!

இலங்கைக்கு பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.

susma-suwaraj-india

எதிர்வரும் நாட்களில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ளமையால் அவரது வருகைக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டே வௌிவிவகார அமைச்சர் நேற்று (06) தனது இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

சுமார் 25 வருடங்களுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனால் அவரது பாதுகாப்பு மற்றும் உடன்நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் பொருட்டே சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தார்.

அவரது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என தகவல் வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகிதி பிரதமர் நரேந்திரமோடியின் வருகையை முன்னிட்டு அதற்கான ஆயத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போருக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணம் திருகோணமலை ஆகிய வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அத்துடன் அநுராதபுரம் கண்டி ஆகிய பிரதேசங்களுக்கும் கண்டியின் தலதா மாளிகைக்கும் , மலையக இந்திய பெருந்தோட்ட வீடமைப்பு திட்டத்தையும் மோடி பார்வையிட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தினைத் தொடர்ந்து பிரதமர் இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பரம் நட்புறவு பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதலாவதாக பயணம் செய்த நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts