- Monday
- May 11th, 2026
இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில்...
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் அதிலிருந்த முற்றாக விடுபட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைபொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கெதிராக கட்சி பேதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். "போதைப் பொருள் அற்ற நாடு" என்ற தொனிப்பொருளில் ஜாஎல நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றும்...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும், காணாமற் போனவர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் தீர்க்கமான முடிவு எடுப்பதாகக் கூறியிருப்பது எதிர்வரும் தேர்தலிலும் எமது மக்களை ஏமாற்றும் இன்னொரு செயற்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ், அரசியல்...
இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில்...
தற்கொலை முயற்சி செய்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 4 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 வருடத்தில் கல்வி கற்ற மாணவி இவ்வாறு உயிரிழந்தவராவார். இம்மாணவி அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட ஆசிரியர்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து செயற்பட எண்ணியதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. அவர்களின் பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முன்னாள் போராளிகளின் அமைப்பிற்கு ஓர் இடத்தையாவது வழங்க மறுத்தது வருந்தத்தக்க விடயம் மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதுமாகும். ஏன் இன்றும் த.தே.கூட்டமைப்பில்...
தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரச நிறுவனங்களினூடாக தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுப்பது குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்களில் அதிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றர். பதவி உயர்வு, புதிய நியமனங்கள் மற்றும் அரச வளங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள்...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார். இதனடிப்படையில் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும், நாளைய தினம் அதற்கான வேட்புமனு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர்...
கணப்பொழுதில் 147 உயிர்களை காவுகொண்ட நவாலி படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 1995ஆம் ஆண்டு இதே நாளில், பலாலி ராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தினரால், வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது, விமானப்படையினரும் அதற்கு ஒத்தாசையாக குண்டுகளை கணக்கின்றி வீசினர். மக்கள் அல்லோக கல்லோலப்பட்டு தமது...
வடமராட்சி கிழக்கு, குடத்தனையிலுள்ள ஆரம்பப் பிரிவு கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 5 மாணவிகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா புதன்கிழமை (08) உத்தரவிட்டார். பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் ஆய்வின் பிரகாரம் பருத்தித்துறை பொலிஸ்...
இலங்கையின் பிரபல ஆண்கள் பாடசாலையாக விளங்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ இலட்சனை வெளியீட்டு நிகழ்வு திங்கட்கிழமை (06) கல்லூரியின் றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. இலட்சனை வெளியீட்டு நிகழ்வில் யாழ். மெதடிஸ்மிஷன் திருச்சபை தேவாலய குருமுதல்வர் வண. ரவிசங்கர் நைல்ஸ் அடிகளார் கலந்துகொண்டு இலட்சனையை திரைநீக்கம்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி என்றும் அவ்வியக்கத்தை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் போராளி இல்லை என தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாரச்சி, தெரிவித்தார். மேற்படி நபர், மல்லாகம் மாவமட்ட நீதிமன்றத்தினால் செவ்வாய்க்கிழமை (07) பிணையில்...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறந்த வெற்றியைப் பெற்றாலும் அமைச்சரவையில் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மாவை, அங்கு மேலும் கூறுகையில், 'தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பலத்தை...
கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான பத்மநாதன் பாவலனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரத்தில் அவரது பூதவுடலை யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். லண்டன் சர்ரே பகுதியிலுள்ள ரீகிரியேஷன் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் -...
கொடிகாமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் யுவதி ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அனுமதி பெறப்படாமல் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் அங்கு சென்ற பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்ட யுவதியைக் கைதுசெய்தனர். வவுனியாவைச்...
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காணாமற்போன உடுவில், மானிப்பாய் வீதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தரான பிறேம்குமார் நிந்துஜன் (வயது 30) மற்றும் அவருடைய மகன் நிந்துஜன் தரணிகன் (வயது 03) ஆகியோரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. இவர்கள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில அவருடைய மனைவியால் ஒரு வருடத்துக்கு...
யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குலுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியவிளான், இளவாலையை சொந்த முகவரியாகவும், ஏழாலை வடக்கு, ஏழாலையை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காணொளி ஆதரங்களுடன் குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர் என...
போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் ஆகிய திகதிகளில் சகல மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு காலப்பகுதியை முன்னிட்டே இந்நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்...
Loading posts...
All posts loaded
No more posts
