- Monday
- May 11th, 2026
யாழ்.நீதிமன்ற கட்டிட தொகுதி மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4வது பிரிவினரில் 26 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் க.கேசவன் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 08 பேர் 5 லட்சம் ரூபா...
நாட்டிலுள்ள சகல பிள்ளைகளும் சிறந்த கல்வியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதுடன் கிராம மற்றும் நகர்ப்புற பிள்ளைகள் அனைவருக்கும் சமமான வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிள்ளைகள் தமது கல்வி மற்றும் அனுபவத்தினூடாக எதிர்காலத்தை வெற்றிகொள்ளக் கூடிய வகையில் சிறந்த கல்வி முறையை நாட்டில் ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை...
தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள், ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் முகமாக நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்ட வேட்புமனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று பிற்பகல் கையெழுத்திடும் நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்றது. இதன்படி கூட்டணி தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான...
வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2015) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை...
இதுவரையில் நடந்து முடிந்துள்ள ஒரு தேர்தலுக்கு முன்பாவது இதுவரையில் நாம் எமது மக்களுக்கு இதுவெல்லாம் செய்துள்ளோம் எனக் கூறி வாக்கு கேட்கத் தகுதியில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இனி செய்வோம் என்று கூறியே தொடர்ந்தும் வாக்குகளைக் கேட்டு வருகின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் எமது மக்களுக்கு எதுவுமே செய்யாமல், எமது மக்களை ஏமாற்றி, முடக்கி...
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 110 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்றிரவு வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சட்ட விரோதமான முறையில் பொருட்கள் விநியோகித்தல், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை ஒட்டுதல், அரச சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் அரச ஊழியர்களை தேர்தல் செயற்பாடுகளில்...
பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக மாற்று செயற்பாடொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயம் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார். நடைமுறையிலுள்ள முறையினால் தேசிய ரீதியான மதிப்பீடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார். பாடசாலைகளின் ஒப்படை செயற்பாடுகளின்...
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பதிவுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் போது, மாணவர்களுக்கான பாடத் தெரிவில் சிக்கல் ஏற்படுத்தப்படுவதோடு அவர்களுக்கு அசாதாரனம் இழைக்கப்படுவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹன்த சில்வா தெரிவிக்கின்றார். இந்த விடயம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து, அதனை...
இலங்கையின் வடக்கு -கிழக்கு மக்களுக்கு உசிதமான ஒரு தீர்வு உருவாக உலகத்தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அமெரிக்காவில் அறைகூவல் விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன். ஓர் இனத்கை குறிவைத்து இனப்படுகொலை நடைபெறும்போது அதற்கு எதிர்த்தாக்குதல் அந்த இனத்தினால் நடத்தப்பட்டால்,இனப்படுகொலையில் ஈடுபட்ட இனம்தான் அதற்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், இருப்பினும் அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குத் தமக்கு அதிகாரமில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என பிரஜைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறப்பிட்டதாக தொழிற்சங்கத் தலைவர்...
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கி மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அவர்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நெல்லியடி பிரதேசத்தில் அதிகாலை 4 மணியளவில் வீதி...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நாட்டில் அரசியல் பதற்ற நிலை அதிகரித்துவரும் வேளையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேற்றுப் பிரிட்டனுக்குத் திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய சகாவான சந்திரிகா குமாரதுங்க சமீபத்தில் இடம்பெற்ற மஹிந்த தரப்பு விடயங்கள் குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ளார் எனவும், இந்நிலையிலேயே அவர் பிரிட்டன் பயணமாகியுள்ளார்...
பிரதான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கூட்டம் கூடுதல், வேட்புமனு தாக்கல் செய்வதை தடைசெய்தல், இடையூறு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் தடை விதித்துள்ளதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
தலைக்கவசம் அணியாமல் வேகக்கட்டுப்பாட்டு இல்லாமல் மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞன் குருநகர் சேமக்காலைக்கு திரும்பு வளைவுடன் மோதுண்டதில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவத்தில் செல்வராசா றுபின் வயது 19 என்பவரே உயிரிழந்தவராவார். மேலும் இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் எவர் சென்றாலும் எக்காரணம் இல்லாமல் உடனடியாக அவர்கள்...
சுன்னாகம், புஸ்பமணியம் வீதியில் கஞ்சா நுகர்ந்த பூசகர் ஒருவரை, நேற்று வியாழக்கிழமை (09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப் பொலிஸார், பூசகர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்த போதே, பூசகர் கஞ்சா நுகர்ந்தமை தெரியவந்தது. பூசகரை...
புலிப் போராளிகளுக்கு எதிர்வரும் தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்க இயலாது என புலிப் போர்வையாளிகள் கூறியுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றய தினம் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "புலிகள்...
சாவகச்சேரி பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளர் கனகா சிவபாதசுந்தரம் மரணதண்டனை விதித்து, நேற்று வியாழக்கிழமை (09) தீர்ப்பளித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தவமணி மகான் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில்...
கொடிகாமம் - இராமாவில் பகுதி விடுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட வவுனியா யுவதி உட்பட மூவரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிகாமம் - கண்டி வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் விபசாரம் இடம்பெற்றுவருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விடுதியைச் சுற்றிவளைத்த கொடிகாமம் பொலிஸார், வரணியைச் சேர்ந்த விடுதியின் உரிமையாளர், வவுனியா...
உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டொக்டர் விஜயராகவன் ஜானகிராமன் தெரிவித்தார். அவரும் அவரது நண்பரும் சக மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்களை இதற்காக...
Loading posts...
All posts loaded
No more posts
