Ad Widget

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக மாற்று செயற்பாடு

பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகளுக்கு பதிலாக மாற்று செயற்பாடொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயம் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார்.

நடைமுறையிலுள்ள முறையினால் தேசிய ரீதியான மதிப்பீடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.

பாடசாலைகளின் ஒப்படை செயற்பாடுகளின் மூலம் அனைவரும் நன்மைகளைப் பெறுவதில்லை என்பதுடன் பெரும்பாலான ஆசிரியர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

இதன் பிரகாரம் பாடசாலை ஒப்படை செயற்பாடுகள் தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி தீர்வொன்றை எட்டவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts