Ad Widget

வவுனியாவில் கடும் மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வவுனியாவில் நேற்று மாலை வேளை தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் - வவுனியா வீதி, பண்டாரிகுளம்- வேப்பங்குளம் வீதி, மூன்று முறிப்பு பகுதியில் ஏ9 வீதி என்பன கடும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்தன. இதனால் ஒரு மணி நேரம்...

என்னைக் கைதுசெய்ய முயற்சி! பின்னணியில் ரணில் என்று குற்றம்சாட்டுகின்றார் மஹிந்த!!

"எனது மீள்வருகை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக என்னைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கின்றது." - இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. "பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால், சவால்களுக்கு முகம்கொடுக்க நான் தயார்" - என்றும் அவர் கூறியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட...
Ad Widget

பொதுத் தேர்தலின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்! அதுவரை விசேட ஆணையரின் கீழ் அவை இயங்கும்!!

அனைத்து உள்ளூராட்சி சபைகளும் மே 15 ஆம் திகதி கலைக்கப்படவுள்ள நிலையில் இதற்கு முன்னர் விசேட ஆணையாளரின் மேற்பார்வையின் கீழ் அவை கொண்டுவரப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நடைபெற்ற பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்கலாம்!

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்...

முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்காக பிதிர்கடன் செலுத்தி நினைவுகூர அழைப்பு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்கடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய்பபட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தி. துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

கமலின் விக்ரம் படம் ரீமேக் ஆகிறது: சூர்யா நடிக்கிறார்

கமலின் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘விக்ரம்’. இதில், கமலுடன் சத்யராஜ், டிம்பிள் கபாடியா, லிசி ஆகியோர் நடித்து இருந்தனர். ராஜசேகர் இயக்கியிருந்தார். ‘விக்ரம் விக்ரம்’, ‘வனிதா மணி’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’, ‘மீண்டும் மீண்டும் வா’ போன்ற இனிய பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. இப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக...

நேபாள பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண பொருட்களை வழங்கிய விஜய்

நடிகர் விஜய் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு உதவிகள் செய்து ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்துள்ளார். தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், இலவச கம்யூட்டர் பயிற்சி மையங்கள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், விஜய், கடந்த...

கையொப்ப முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டிற்கு யாழ்.பல்கலையின் விஞ்ஞான ஆசிரியர் சங்கம் விளக்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமானது பல்கலைக்கழக கல்விசார் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டிற்கு பெறப்பட்ட தங்கள் கையொப்பங்களை முறைகேடான விதத்தில் பயன்படுத்தியுள்ளது. என்ற குற்றச்சாட்டு தொடர்பான விளக்கமொன்றிற்கான ஊடக சந்திப்பினை இன்று யாழ். பல்கலைககழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் நடாத்தியிருந்தது. இச் சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் தலைவர்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் யாழ். பல்கலைக்கழகத்திலும் ஆரம்பம்!

இறுதிப்போரின்போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நினைவேந்தல் வாரத்தின் முதல்நாளான இன்று யாழ்.பல்கலைக்கழகத்திலும் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பல்கலை மாணவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்

நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் சி பெரேரா தலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவின் பணிப்புரைக்கமைய திங்கட்கிழமை (11) நடைமுறைக்கு வரும் வகையில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்படும்...

இந்தியாவில் பூமியதிர்ச்சி

இந்தியாவின் வடக்கு பகுதியில் 7.4 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பூமியதிர்ச்சி இன்று நண்பகல் 12.40 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பூமியதிர்ச்சியால் டெல்லி தலைநகரம் உட்பட வடக்கு இந்தியாவின் பல பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் இன்றில் இருந்து 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என்று வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார். அதன்படி இன்றைய தினம் குறித்த நினைவேந்தலை ஆரம்பிக்கும் முகமாக நினைவுச்...

சர்வதேச தாதியர் தினம் இன்று

இன்று சர்வதேச தாதியர் தினமாகும். "மாற்றத்துக்கான சக்தியாக - பயனுள்ள பராமரிப்பு" என்ற தொனிப் பொருளில் இவ்வாண்டு தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. தாதியர் அனைவரையும் சமமாக மதித்து செய்து வரும் அரும் பெரும் சேவைகளையும் தியாகங்களையும் நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 1965ஆம் ஆண்டு முதல் சர்வதேச செவிலியர் அமைப்பு சர்வதேச தாதியர் தினத்தை...

உயர் பாதுகாப்பு வலயத்தில் மாற்று வீதி அமைப்பதற்கு 27 ஏக்கர் காணி தேவை: விடுவிக்குமாறு இராணுவத்திடம் யாழ்.அரச அதிபர் கோரிக்கை

வல்லை-அராலி பிரதான வீதியில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினுள் அடங்கும் வீதிக்குப் பதிலாக மாற்றுவீதி அமைப்பதற்கு இராணுவத்தினர் மேலும் 27 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வல்லை-அராலி பிரதான வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலய எல்லைக்குள் அகப்பட்டுள்ளது.இதனால்...

மண்டைதீவுக்கான குடிநீர் விநியோகம் சீரில்லாமையால் மக்கள் சிரமம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் மக்களுக்கான குடிநீர் விநியோகம் உரியமுறையில் இடம்பெறாமையால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்கின்றனர். குடிநீர் விநியோகம் தடைப்படும் போது 6 கிலோமீற்றர் பயணம் செய்து யாழ். நகர்ப் பகுதிக்கு சென்று மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

பெண்ணின் சடலம் மீட்பு

வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியில் கொத்தத்துறையில் ஆள்நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுவதுடன், சடலத்தின் அருகில் அவரது ஆடைகள், பொருட்கள் அடங்கிய பயணப் பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது....

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்ய தீர்மானம்

மகேஸ்வரி நிதியத்திலிருந்து தங்களுக்கு தரவேண்டிய வைப்புப் பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மனு சமர்ப்பிப்பது என யாழ்.மாவட்ட பாரவூர்திகள் சங்கப் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சங்கத்தலைவர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கோண்டாவில் கிழக்கில் அமைந்துள்ள சங்க கட்டடத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம்...

வேலை மாற்றம் பெற்றால் மோட்டார் சைக்கிளுக்கான முழுத்தொகையும் செலுத்தவேண்டும்

முன்னைய அரசாங்கத்தால் அரச வெளிக்கள அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பெற்ற அலுவலர்கள் தங்களது பணிகளில் இருந்து சென்றால், மோட்டார் சைக்கிளின் சந்தைப் பெறுமதியைச் செலுத்த வேண்டும் என திறைசேரியின் திட்டமிடல் பிரிவால் மாவட்டச் செயலகங்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது. வெளிக்கள அலுவலர்களிடம் 50 ஆயிரம் பெற்றுக்கொள்ளப்பட்டு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு...

தேர்தல் சீர்திருத்தம்: புதன்கிழமை நண்பகலுக்கு முதல் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குக! – ஜனாதிபதி வேண்டுகோள்!

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை நாளைமறுதினம் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டமான தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட...

18 தேசிய கல்விக்கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

நாட்டிலுள்ள 18 தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு 2015 ஆம் கல்வியாண்டுக்கான 32 வகையான மூன்றாண்டு கால ஆசிரியர் கல்வி தொடர்பான சேவை முன்தொழிற்பயிற்சிகளைப் பயில்வதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 25 வயதிற்குட்பட்டு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தேவையான இசட் புள்ளிகளைப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 32 வகையான பாடநெறிகளுக்கு தேவையான...
Loading posts...

All posts loaded

No more posts