யாழில் மாணவர்களுக்கு சைவநெறிப் போட்டி

யாழ். கல்விவலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே சைவசமய அறிவை மேம்படுத்தும் வகையில் சைவநெறிப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கமைய பேச்சு, மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல் மற்றும் பண்ணிசை ஆகிய போட்டிகள் தரம் 6 முதல் க.பொ.த உயர்தர மாணவர்களிடையே, நான்கு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,...

மேல் – வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமனம்!

மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் நேற்று (07) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாணசபை முதலமைச்சாராக இசுரு தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதேவேளை வடமேல் மாகாண...
Ad Widget

பேராதனை பல்கலைகழக முதற்கலை வௌிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத் வௌிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும். இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk/edce என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி...

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்

பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமத்தனமான ஆண்ட்ராய்ட் திறன் பேசி செயலி ஒன்று வலம் வருவதை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 'அடல்ட் பிளேயர்' என்ற இந்த செயலி பயனாளிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டும், ஆனால் உண்மையில் அது ஃபோனில் முன்பக்கத்து கேமராவை ரகசியமாக இயக்கி பயனாளியை படம் பிடித்துவிடும். பின்னர் இந்த செயலி...

ஆயுத ஊழல் வழக்கில் இருந்து கோத்தாபாய விடுவிப்பு

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர் முந்தைய ராஜபக்சே அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது மிதக்கும் ஆயுத கிடங்கை...

ஐ.நா. அமர்வுகளில் வடமாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாது : அவைத்தலைவர்

வடமாகாணசபையின் அனுமதியின்றி மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பாக கலந்து கொள்ள முடியாது என தெரிவித்திருக்கும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தேவை இருப்பின் தனிப்பட்ட முறையில் ஜெனீவா அமர்வுகளில் பங்கெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 14 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் மாகாணசபை சார்பில் உறுப்பினர்கள்...

சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் பதவிகளால் பயனில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் நியமிக்கப்பட்டதும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் ஆகியமையும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை (07) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டின் தேசிய...

யாழில் வெடிபொருள் வெடித்ததில் இருவர் படுகாயம்!

யாழ்.ஓட்டுமடம் பகுதியில் பழைய இரும்பு விற்பனை செய்யும் இடத்தில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (07.9.2015) முற்பகல் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி கிராம சேவகர் பிரிவு ஜே-88 பிரிவில் உள்ளடங்கும் ஓட்டுமடம் ஆலடி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ஜெ.பத்மஜெகன் (வயது-28), எஸ்.சுரேஷ் (வயது-26)...

யாழ். நல்லூர் தேர், தீர்த்தத்தின் போது குற்றங்கள் புரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை! நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களின்போது, கலாசாரச் சீரழிவு குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று எச்சரிக்கை செய்துள்ளார். போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல்...

தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வையே நாம் ஏற்போம்! – திருமலை கௌரவிப்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதி

நல்லாட்சிக்கு அத்திவாரம் நிரந்தர சமாதானம். இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள். எமது மக்களை நாம் கைவிடமாட்டோம். எமது மக்கள் விரும்புகின்ற தீர்வையே நாம் ஏற்றுக்கொள்வோம். - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கவுண்டமணியுடன் நடித்தது ஜாலியான அனுபவம் – நடிகர் சத்யராஜ்

கவுண்டமணி கதாநாயகனாக நடித்து, ஆரோக்கியதாஸ் டைரக்ஷனில், டாக்டர் சிவபாலன் தயாரித்துள்ள படம், ‘49 ஓ.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல்களை நடிகர் சத்யராஜ் வெளியிட, நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். விழாவில் சத்யராஜ் பேசியதாவது:- ‘‘நான் எத்தனையோ அழகான நடிகைகளுடன் ஜோடியாக நடித்திருந்தாலும், அண்ணன் கவுண்டமணியுடன்...

இலங்கை அகதிகள் முகாமில் இளம் மனைவி தீக்குளித்து தற்கொலை

தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது, மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு...

இலங்கையின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜெயரத்ன

ஜெரோம் ஜெயரத்ன (Jerome Jayaratne) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இலங்கை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்த மாவன் அத்தப்பத்து தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். சொந்த மண்ணில் இலங்கை அணி தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளிடம் டெஸ்ட் தொடரை இழந்திருந்தமையே...

கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவு விநியோகத்தில் சுன்னாகம் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் முறைகேடு : இரண்டு பணியாளர்கள் இடைநிறுத்தம்

கர்ப்பிணித் தாய்;மார்களுக்கு வழங்கவேண்டிய போசாக்கு உணவுப்பொருட்களுக்குப் பதிலாக சவர்க்காரம், சலவைச் சோடாத்தூள் (சேர்வ் எக்செல்), சீனி, பிஸ்கற் போன்றவை வழங்கப்பட்டது நிரூபணமாகியுள்ளதையடுத்து சங்கத்தின் பொது முகாமையாளரையும், கிளை முகாமையாளரையும் பதவியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகக் கூட்டுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், 'கர்ப்பிணிகளுக்கான போசாக்கு உணவு வழங்கலில் அதிருப்தி - சுன்னாகம் ப.நோ.கூட்டுறவுச் சங்கம்...

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செலயகம் முன்பாக இன்று திங்கட்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். புதிய அரசாங்கம் வழங்கவிருப்பதாக கூறப்படும் வேலைவாய்ப்பில் தங்களை முன்னிலைப்படுத்தி உள்வாங்க வேண்டும் எனக்கோரி இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன்...

மஹிந்தவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி?

குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது.

பழைய படுகொலைகள் விசாரணைகளை அறிக்கையிடுமாறு பிரதமர் கட்டளை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

ராஜாங்க,பிரதியமைச்சர்கள் நாளை பதவிபிரமாணம்

புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமான நிகழ்வுகள் பெரும்பாலும் நாளை இடம்பெறலாம் என அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 45 பேர் பதவிகளை ஏற்றுக்கொள்ளவுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டது. அன்றைய தினம் சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 42...

கபாலி படத்தில் ரஜினிக்கு சர்வதேச போலீஸ் வேடமா?

ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்க இருப்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் ஒரு நிழல் உலக தாதா என இதுவரை நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் புகைப்படம் ஒன்றில் ரஜினி மலேசிய போலீஸ் அதிகாரி தோற்றத்தில் உள்ளார். இதனால்,...

தேர்தல்களின் போது வாக்குரிமையினை இழந்தவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க முடியும்

நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போதும் வாக்குரிமையினை இழந்தவர்கள் அது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் இந்த விபரங்களை தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்கள் தங்களது...
Loading posts...

All posts loaded

No more posts