Ad Widget

இலங்கைப் பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்லும் உத்தரவு குறித்து மேன்முறையீடு

இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ள தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்ய வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சவுதியில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் பிறிதொருவருடன் தகாத உறவைப் பேணியதாக கூறி ஷரியா சட்டத்தின் பிரகாரம் அவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையர் ஒருவருடன் தான் தகாத உறவைப் பேணியதாக அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதனுடன் தொடர்புடைய ஆணுக்கு நூறு கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறு இருப்பினும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை தளர்த்துமாறு கோரி மேன்முறையீட்டை முன்வைக்க வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகொரல நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு அதற்கான நிதி வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts