Ad Widget

சில அத்தியவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை

அத்தியவசிய பொருட்கள் சிலவற்றை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட கோதுமை மா ஒரு கிலோ 95 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் ஒரு கிலோ 355 ரூபாவாகவும், கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 20ம் திகதி முதல் இதனை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts