Ad Widget

சர்வதேச தாதியர் தினம் இன்று

இன்று சர்வதேச தாதியர் தினமாகும். “மாற்றத்துக்கான சக்தியாக – பயனுள்ள பராமரிப்பு” என்ற தொனிப் பொருளில் இவ்வாண்டு தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது.

தாதியர் அனைவரையும் சமமாக மதித்து செய்து வரும் அரும் பெரும் சேவைகளையும் தியாகங்களையும் நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 1965ஆம் ஆண்டு முதல் சர்வதேச செவிலியர் அமைப்பு சர்வதேச தாதியர் தினத்தை அனுஷ்டித்து வருகிறது.

இதே சமயம் சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நிகழ்வொன்று அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னர் தாதியர் தினத்தினை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் தாதியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் பொருட்டு பொதுச் சேவைகள் ஐக்கிய தாதிமார் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த சனிக்கிழமை சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts