Ad Widget

தேர்தல் சீர்திருத்தம்: புதன்கிழமை நண்பகலுக்கு முதல் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குக! – ஜனாதிபதி வேண்டுகோள்!

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை நாளைமறுதினம் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டமான தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பிலேயே விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, விஜயதாஸ ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்பினர் அனுரபிரியதர்ஷன யாப்பா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை 13ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர் மீண்டும் கூடி இது தொடர்பில் கலந்துரையாடுவோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related Posts