Ad Widget

உயர் பாதுகாப்பு வலயத்தில் மாற்று வீதி அமைப்பதற்கு 27 ஏக்கர் காணி தேவை: விடுவிக்குமாறு இராணுவத்திடம் யாழ்.அரச அதிபர் கோரிக்கை

வல்லை-அராலி பிரதான வீதியில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினுள் அடங்கும் வீதிக்குப் பதிலாக மாற்றுவீதி அமைப்பதற்கு இராணுவத்தினர் மேலும் 27 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வல்லை-அராலி பிரதான வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலய எல்லைக்குள் அகப்பட்டுள்ளது.இதனால் அண்மையில் மீள்குடியமர்வு செய்யப்பட்ட பலாலி தெற்கு மற்றும் வயாவிளான் கிழக்கு மக்கள்,தமது தேவகளை நிறைவு செய்ய தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு வருவதற்கு சுற்று வீதிகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில்,உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அகப்பட்ட வீதிக்குப் பதிலாக மாற்று வீதியை அமைப்பதற்கு இராணுவத்தினர் முற்பட்டுள்ளனர்.

எனவே வல்லை-அராலி வீதிக்கு மாற்று வீதி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.மாற்று வீதி பொது மக்களின் காணிகள் ஊடாக அமையாமல் இருக்க வேண்டுமாயின் இராணுவத்தினர் இன்னமும் 27 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts