Ad Widget

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்ய தீர்மானம்

மகேஸ்வரி நிதியத்திலிருந்து தங்களுக்கு தரவேண்டிய வைப்புப் பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மனு சமர்ப்பிப்பது என யாழ்.மாவட்ட பாரவூர்திகள் சங்கப் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சங்கத்தலைவர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கோண்டாவில் கிழக்கில் அமைந்துள்ள சங்க கட்டடத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி இறக்குவதற்காக வைப்பிலிட்ட பணம் மற்றும் ஏற்றி இறக்கும் போது செலுத்திய கட்டுப்பணம் என சுமார் 20 மில்லியன் ரூபாய் பாரவூர்தி சங்கத்திலுள்ள பாரவூர்தி உரிமையாளர்களுக்கு மகேஸ்வரி நிதியம் வழங்கவேண்டும்.

குறித்த பணத்தை மகேஸ்வரி நிதியம் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கு மகஜர்கள் கையளித்தும் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, நேற்றய கூட்டத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts