Ad Widget

முறையான அறிவிப்பு இன்றி வவுனியா மாவட்ட செயலாளர் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது?

வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு உத்தியோகபூர்வ கோரிக்கை தனக்கு கிடைக்கவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலாளருடன் இணங்கி செயற்பட முடியாது என்று அவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தனக்கு அறியக்கிடைப்பதாக அவர் கூறினார். மாகாண சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம்...

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசும் கூட்டமைப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை!

இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,...
Ad Widget

மீள்குடியேற்ற அமைச்சருடன் கூட்டமைப்பு பேச்சு

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவித்து, மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கொழும்பில் புதன்கிழமை (24) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், இரா.செல்வராசா, சீ.யோகேஸ்வரன்,...

சித்தன்கேணி ஆயலத்தில் தங்கச் சங்கிலியினை அபகரிக்க முற்பட்ட தென் பகுதி யுவதிகள் மடக்கிப்பிடிப்பு

ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களின் தங்க நகைகளை அபகரிக்க முற்பட்ட இரு யுவதிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சித்தன்கேணி ஸ்ரீ சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இறுதி நாளான இன்று (24) மதியம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. பூஜை வழிபாட்டின் போது, தென் பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படும் இரு இளம் யுவதிகள்...

தரம் பிரிக்காத குப்பைகளை மாநகர சபை இனி அகற்றாது : மக்களை விழிப்பூட்டல் இன்று முதல் ஆரம்பம்

தரம் பிரிக்கப்படாத குப்பைகளை மாநகர சபைப் பணியாளர்கள் அகற்ற மாட்டார்கள். யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து வரியிறுப்பாளர்களும் தமது இடங்களில் உள்ள கழிவுகளைத் தரம் பிரித்தே இனி மாநாகர சபைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். குருநகர் வட்டாரப் பகுதிகளில் திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்தல் தொடர்பான...

வடக்கு – தெற்கு முதியோர் நட்புறவு

சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு, தெற்கிலுள்ள முதியோர்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தும் இணைப்புத்திட்ட நிகழ்ச்சியொன்று, கைதடி முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்றது. தெற்கிலிருந்து அழைத்து வரப்பட்ட 125 முதியவர்கள், கைதடி முதியோர் இல்ல முதியவர்களுடன் இணைந்து கலை நிகழ்வுகளை நடத்தினர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர் சங்க உறுப்பினர்களே...

ஒலிம்பிக் தின நிகழ்வுகள் முதற் தடவையாக மன்னாரில்

மன்னாரில் முதற் தடவையாக ஒலிம்பிக் தின நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை மாலை நான்கு மணியளவில் மன்னர் தீவினையும் பெருநிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலத்தில் இருந்து வைபவரீதியாக ஆரம்பமாகியது. மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாடசாலைகளின் மாணவ மாணவிகள் ஒலிம்பிக் தீபத்தையும் அதனை தொடந்து ஒலிம்பிக் சின்னம் மற்றும் கொடியை ஏந்தியவாறு நடைபவனியாக சென்றனர். மன்னார் பிரதான பாலத்திலிருந்து...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் சாவு!

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இன்று புதன்கிழமை 9.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். முல்லைத்தீவிலிருந்து வவுனியாநோக்கி சென்ற தனியார் பஸ், இ.போ.ச. பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இந்தப் பெண்ணை தனியார் பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி...

கூரையில் ஏறி முதியவர் போராட்டம்!

தனக்கு சொந்தமான காணியை தன்னிடம் வழங்குமாறு கோரி முதியவர் ஒருவர் வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில் உள்ள கூரையின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட வேவத்தெக விக்கிரமசூரிய தெரிவிக்கையில், வவுனியா, நெடுக்குளம், மினிமறிச்சகுளம் பகுதியில் எனது தந்தைக்கு ஓர் ஏக்கர் வயல்காணி இருக்கிறது. அந்தக் காணி அவருக்கு பின்...

யாழ்.குடாவில் 7,779 ஏக்கர் தனியார் நிலம் படையினர் வசம்! 10,496 குடும்பங்கள் நிர்க்கதி

இலங்கையில் போர் நிறைவடைந்த பின்னரும் யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் 7ஆயிரத்து 779 ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான நிலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 ஆயிரத்து 496 குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளை இழந்த நிலையில் வாழ்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் போருக்குப் பின்னரும் பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவு நிலம் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு...

திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித் ரணசிங்க, ஹெட்டிஆராச்சி பிரசாத், சம்பத் முனசிங்க ஆகியோர் மூவருக்கும் எதிராக சான்று உள்ளதெனவும் இந்தக் கடத்தலில் புலனாய்வுப் பிரிவின் விசேட...

பற்றைக்காட்டிற்குள் வளர்ந்த சிறுமிகள்!

பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம்நேற்று நடந்துள்ளது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள் மூவர் நேற்று மதியம் சென்றிருந்தனர்.அப்போது, பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில்...

உருத்திரபுரத்தில் காணாமற்போன சிறுமியை கண்டுபிடிக்க மூன்றாவது நாளாகத் தேடுதல்!

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுகாடு பகுதியில் காணாமல்போன 3 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து கிராம மக்களும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கையில், இதுவரை சிறுமி தொடர்பிலான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என...

ஆறு மாதங்களுக்குள் 23 பாடசாலை மாணவர்களுக்குத் தொற்றியது எயிட்ஸ்!

இலங்கையில் கடந்த ஆறுமாத காலத்தில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக கடந்த ஆண்டு 22 பாடசாலை மாணவர்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதக் காலப் பகுதியில் மேலும் 23 மாணவர்களும் எச்.ஐ.வீ நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக எயிட்ஸ் சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ...

சட்டவிரோத மணல் கடத்தும் வாகனங்களை அரசுடமையாக்க உத்தரவு

யாழ்.மாவட்டத்தின் தீவுப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வாகனங்களை சட்டப்படி அரசுடமையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டார். வழக்கு விசாரணையொன்றின் பிணை மனுக்கோரல் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவை...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டும்

ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கியமான வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய இடம் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலம் என்பதும் இன்று பலருக்கு தெரியாது. ஆக, எமது இடங்களில் வரலாற்று முக்கியத்துவங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களையும் வரலாற்றுடன் தொடர்புடைய கட்டடங்களையும் பாதுகாக்கவேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலரஜா தெரிவித்தார். பொன்னாலை வரதராஜப்...

மெகி நூடில்ஸ் இறக்குமதிக்கு தடை

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மெகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறுஇலங்கை சுங்க திணைக்களத்திடம் நுகர்வோர் அதிகார சபை நேற்று செவ்வாய்க்கிழமை(23) கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மெகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைக்கும் சாத்தியம்?

சிலவேளையில் நாடாளுமன்றத்தை இன்று புதன்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய புதிய அரசாங்கத்தின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைந்த நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கட்சிகளிடையே எந்தவொரு இணக்கப்பாடும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து, தேர்தலை அறிவிப்பார் என தெரியவருகிறது. 20ஆவது திருத்தம்...

சிறுபான்மை மக்களின் நியாயபூர்வமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்! – சம்பந்தன்

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களின் நியாய பூர்வமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் அர்த்தபுஷ்டியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக புதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார். மேலும், யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் 20வருடங்களுக்கு 9 ஐ விடவும்...

அரசாங்கம் மாறினாலும் நாட்டின் தேசியக் கொள்கை மாறக்கூடாது -ஜனாதிபதி

ஒரு நாட்டில் அரசாங்கங்கள் மாறுகின்ற போது அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொது தேசிய கொள்கைகள் மாற வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயனுள்ள சரியான திட்டங்கள் ஒரு சில அமைச்சுகளில் செயற்படுத்தப்பட்டாலும் அமைச்சர்கள் மாறுகின்றபோது அக் கொள்கைகளை எடுத்தெறிவது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு தடையாக அமையுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தலைசிறந்த தேசிய கொள்கைகளுக்கான இயக்கத்தினால்...
Loading posts...

All posts loaded

No more posts