Ad Widget

 நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைக்கும் சாத்தியம்?

சிலவேளையில் நாடாளுமன்றத்தை இன்று புதன்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய புதிய அரசாங்கத்தின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைந்த நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கட்சிகளிடையே எந்தவொரு இணக்கப்பாடும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து, தேர்தலை அறிவிப்பார் என தெரியவருகிறது.

20ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இதனை கவனத்தில் எடுத்துகொண்டு புதிய நாடாளுமன்றத்தில் அந்த திருத்தத்தை நிறைவேற்றிகொள்ளும் வகையில் மக்களின் ஆணையை கோரியே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

20ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்பதை மக்களுக்கு காண்பிக்கும் வகையிலேயே இந்த திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

Related Posts