Ad Widget

வழிபாடுகளில் கலந்துகொள்ள இராணுவம் அனுமதி

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி இராஜஇராஜேஸ்வரி ஆலயத்தில் தைப்பூச திருநாளான செவ்வாய்க்கிழமை (03) பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட இராணுவத்தினர் அனுமதியளித்தனர். இராணுவ சோதனை சாவடியில் இருந்து இராணுவத்தினரின் பஸ்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். பொதுமக்களுடன் இணைந்து யாழ். மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்,...

முதியோர்களுக்கான கண்வில்லைகள், பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்கப்படும்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால் வறிய நிலையில் வாழும் முதியோர்களுக்கு வழங்கப்படும் இலவச கண்வில்லைகள், எதிர்காலத்தில் உரிய பிரதேச செயலாளர் ஊடாக முதியவர்களுக்கு வழங்கப்படும் என செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த இலவச கண்வில்லைகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பிரதேச...
Ad Widget

அசிட் வீசிய வயோதிபருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பூதவராயர் வீதி பகுதியில் வைத்து நபரொருவர் மீது கடந்த திங்கட்கிழமை(02) அசிட் தாக்குதல் மேற்கொண்ட வயோதிபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை(03) உத்தரவிட்டார். இந்த அசிட் தாக்குதலில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பொன்னுத்துரை கமலநாதன்(வயது 45) என்பவர் படுகாயமடைந்த யாழ். போதனா...

வீணைக்கு வழங்கும் ஆணையே விடிவை தரும் – டக்ளஸ்

எதிர்வரும் காலங்களில் நாம் எமது கட்சியின் சின்னமாகிய வீணைச்சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும், வீணைக்கு வழங்கும் ஆணையே விடிவை தரும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு மேலும் உரமூட்டுங்கள் என்றும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கட்சி முக்கியஸ்தர்களுடனான விசேட கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ்...

மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு

பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் சி.பரந்தாமன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி...

விவசாய காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை

இராணுவம் பயன்படுத்திவரும் விவசாய நிலங்களை, மக்களுக்கு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தில் அமைக்கப்பட்ட நெல்லியடி மரக்கறிச் சந்தையை செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும்...

ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்படவில்லை – இராணுவம்

ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னரைப் போலவே ஓமந்தை இராணுவ முகாம் அவ்விடத்தில் இருக்கும். ஆனால் யுத்த காலத்தை போன்று அல்லாமல் அதனை சோதனை நடவடிக்கைகளில் தளர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓமந்தை ஊடாக பொருட்கள்...

பிரதமரின் சுதந்திரதின செய்தி

இன்று, நாம் 67ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு நாகரீகமான அரசியல் கலாசாரம் எமது தாய்நாட்டில் உதயமாகிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலேயே கொண்டாடுகின்றோம். இலங்கையின் முதலாவது பிரதம அமைச்சர் தேசபிதா மேன்மை தங்கிய டீ.எஸ்.சேனாநாயக்க அவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையே பிரதான கருவியாகப் பயன்படுத்தினார். அந்தச் சக்தியின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அந்த...

ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி

நாட்டில் ஒரு புதிய நல்லாட்சி யுகம் உதயமாகியிருக்கும் இவ்வேளையில் இந்த 67 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் விசேட முக்கியத்துவம் பெறுகிறது. இது எமது தேசத்தின் சுதந்திரம் மற்றும் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எமது மக்களின் ஐக்கியத்திற்கான புதியதோர் அர்ப்பணத்துடன், மீண்டும் மேலெழுந்துவரும் காலனித்துவ சக்திகளைத் தோற்கடித்து எதிர்காலத்தை நோக்கி புதிய உத்வேகத்துடன் முன்னோக்கிச் செல்லும்...

மீண்டும் விஜய்யுடன் மோத ரெடியாகும் சூர்யா!

விஜய்-அஜித் என இருவரின் படங்களுக்கு தான் எப்போதும் போட்டி இருக்கும். அந்த வகையில் சூர்யா தனக்கென்று ஒரு தனி ட்ராக் அமைத்து அதில் பயணிப்பவர். இந்நிலையில் சில வருடங்களுக்கும் முன் வேலாயுதம், 7ம் அறிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது மீண்டும் இவர்கள்...

ஏழு நிமிடங்களை இழந்த இசை

பார்ஸ்ட் ஃபுட் உலகில் இரண்டரை மணிநேரப் படம் என்றாலே ரசிகர்கள் நொருங்குகிறார்கள். ஆனால் இப்போதுதான் கோடம்பாக்கத்தில் மூன்று மணி நேர ஜவ்வு மிட்டாய்களை அதிகமாக தயாரிக்கின்றனர். சென்ற வாரம் வெளியான இசை படமும் 3 மணி நேரம் ஓடுகிறது. சென்டிமெண்ட் காட்சிகள் அதிகம். இந்த அதிகபடி நேரமே படத்தை ரசிக்க முடியாமல் தடுக்கிறது. இதனை லேட்டாக...

அரசின் 100 நாள் திட்டத்திற்கு கமலேஷ் ஷர்மா பாராட்டு

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் ஷர்மா தற்போதைய அரசின் 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று (02) அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடும் போது அவர் பொதுநலவாய அமைப்பின் ஆலோசனைகள் பல 100 நாள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அதனூடாக இலங்கையில் புதிய...

பிரதி அமெரிக்க ராஜாங்க செயலாளர்- ஜனாதிபதி சந்திப்பு

தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான பிரதி அமெரிக்க ராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (02) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதி ராஜாங்க செயலாளர் ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்வைத்துள்ள 100 நாள் திட்டம் குறுகிய நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன....

கூட்டமைப்பைச் சந்தித்தார் நிஷா பிஸ்வால்

இரண்டு நாள் பயணமாக நேற்று இலங்கை வந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்...

வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குள் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, விசேட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் அதன்மூலம் வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.பி.என்.பாலசூரிய, செவ்வாய்க்கிழமை(03) தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையப் பிரிவுக்குள் அதிக குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனரா...

நெல்லியடி பொதுச் சந்தை திறப்பு

வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 51.963 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நெல்லியடி பொதுச் சந்தையின் மரக்கறி விற்பனைப் பகுதி செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா சந்தையை திறந்து வைத்தார். கடந்த...

ஜனநாயக ரீதியில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் மஹிந்த – மாவை

தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க முற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு என்னும் ஜனநாயகத்தால் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களின் 4.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்பட்ட வட்டக்கச்சி...

போரில் உயிரிழந்தவர்களை நினைகூறும் நாள் குறித்து ஆராய்வு

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக ஒரு பொதுவான நாள் ஒன்றை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க முடியுமா என்பது குறித்து தாம் ஆராய்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பாகவுள்ள லோர்ட் நசெபி தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (02) விஜயம் மேற்கொண்ட இவர், வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்கார, யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், சிவில் சமூகப் பிரதிகள்...

பாடசாலை அதிபர்களுக்கான இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

வடமாகாண பாடசாலைகளில் 7 ஆண்டுகளாக ஒரே பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களுக்கான இடமாற்ற பட்டியல் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறையில் சீர் செய்யப்பட்ட இந்த இடமாற்றப் பட்டியல் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது. கல்வி அமைச்சின் சுற்றரிக்கைக்கு அமைய ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 7 வருடங்கள்...

ரயிலுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து

யாழ். மீசாலை சந்தியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையூடாக கடக்க முற்பட்ட உழவு இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை (03) காலை ரயில் மோதியததால், உழவு இயந்திரம் தூக்கி எறியப்பட்டதுடன், அங்கிருந்த கடையொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திர சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு...
Loading posts...

All posts loaded

No more posts