Ad Widget

பிரதி அமெரிக்க ராஜாங்க செயலாளர்- ஜனாதிபதி சந்திப்பு

தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான பிரதி அமெரிக்க ராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (02) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

nesha-my3

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி ராஜாங்க செயலாளர் ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்வைத்துள்ள 100 நாள் திட்டம் குறுகிய நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அது மிகவும் சவால் மிக்கது என்பதையும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மிக நீண்டநாள் நல்லுறவு காணப்படுகிறது. அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் ஊழலை கண்டறியவும் நல்லாட்சி முறையை கட்டியெழுப்பவும் மனித உரிமையை உறுதிப்படுத்தவும் அனைத்து மக்களுக்கு ஜனநாயக ஆட்சி முறையை அனுபவிக்கவும் அமெரிக்கா ஒத்துழைக்கும்.

இருநாடுகளுக்கடையிலான வர்த்தக- முதலீடு உட்பன பல்வேறு உத்தியோகப்பூர்வ விடயங்கள் தொடர்பில் அமெரிக்க தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர- வெளியுறவுக்கான ஜனாதிபதி ஆலோசகர் ஜயந்த தனபால- இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட பல உயரதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related Posts