Ad Widget

வடமாகாணத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு போதாது

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், வடமாகாண மக்களிடையே குறைவாகவே காணப்படுகின்றது. புற்றுநோய் பற்றிய அறிகுறிகள் தோன்றினாலும் அதை உடனடியாகச் சென்று வைத்தியர்களுக்கு காட்ட நாங்கள் தாமதிக்கின்றோம். அதனால் நோய் நன்றாக முற்றிப்போகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினர். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை...

எமது உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவே பனையோலை மாலை

பனைசார் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும் எமது உற்பத்திகளுக்கு நல்லதொரு மதிப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே திங்கட்கிழமை (23) வளலாயில் நடைபெற்ற காணி கையளிக்கும் நிகழ்வில் பனை ஓலையில் வடிவமைக்கப்பட்ட மாலைகள் போடப்பட்டதாக யாழ்.மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.மோகனேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளில் விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு...
Ad Widget

குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் சிறந்த சிகிச்சையை வழங்க முடியும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்தால் வடமாகாண மக்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க முடியும் என நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் சஞ்ஜீவ கருசிங்கே தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நீண்ட காலத்துக்கு பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்...

மருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்

மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பழமைவாய்ந்த மூல விக்கிரகம் உட்பட பல விக்கிரகங்கள், நேற்று திங்கட்கிழமை (23) இரவு மாயமாகியுள்ளதாக ஆலய வழிபடுவோர் சங்க உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். மருதடி விநாயகர் ஆலயம், கடந்த 2004ஆம் ஆண்டு புனருத்தானம் செய்யப்பட்டு 250 மில்லியன் ரூபாய் செலவில்...

மஹிந்தவின் கையெழுத்துடன் காணி உறுதிகள் கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் கையெழுத்து மற்றும் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட காணி உறுதிகளே, யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன. அந்த காணி உறுதிப்பத்திரங்களில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு ஜனாதிபதி என்பதன் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு மேலதிகமாக மேலும் சில அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும்...

யாழில் புற்றுநோயை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி

உலக சுகாதார புற்றுநோய் தினத்தை மாகாண மட்டத்தில் கொண்டாடும் முகமாக இன்று காலை 7.30 மணிக்கு விழிப்புணர்வு நடைபவனி யாழ்.நகரில் நடைபெற்றது. யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து ஆரம்பித்த நடைபவனி யாழ்.போதனா வைத்தியசாலை வீதி,கே.கே.எஸ் வீதி,ஆரியகுளம் சந்தி வேம்படிச் சந்தி,யாழ்.மத்திய கல்லூரி வீதி ,ஊடாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.

பனையோலை மாலை அணிவிப்பு

வளலாய் பகுதியில் இடம்பெற்ற காணிகளை மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட விருந்தினர்களுக்கு பனையோலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன. வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு, வளலாய் பகுதியில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது. ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க...

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் – சுவாமிநாதன்

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், திங்கட்கிழமை (23) தெரிவித்தார். வளலாய், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படும் 430.6 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வளலாய் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது. சில தடங்கல்கள்...

மனிதாபிமான புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கான தேசிய சங்கம் திறப்பு

கிளிநொச்சியை தலைமை அலுவலமாகக் கொண்டு இயங்கும் மனிதாபிமான புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கான தேசிய சங்கத்தின் புதிய அலுவலக கட்டம், திங்கட்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார, கல்வி, சுயதொழில் செய்வதற்காக உதவிகளை வழங்கிவரும் இந்த அமைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கி வருகின்றது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அமைப்பு உதவி செய்து வருகின்றது. சமூக ஆர்வலர்கள் இணைந்து...

பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலப்பு: சந்தேகத்தில் இருவர் கைது

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் நேற்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார்,...

தமிழக மீனவர்கள் 54 பேர் விடுவிப்பு

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை அரசாங்கம் விடுத்த பணிப்புரையை அடுத்தே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற உள்ள நிலையிலேயே 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் கடந்த 21ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை...

தேசிய கீதம் தமிழில் பாடுவதை ஜனாதிபதி விரும்புகின்றார்

தேசிய கீதம் தமிழில் பாடுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விரும்புகின்றார் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 06 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திங்கட்கிழமை (23) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது....

மந்த கதியில் மீள்குடியமர்வு : அமைச்சர் விஜயகலா குற்றச்சாட்டு

காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கை அரசால் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா குற்றஞ்சாட்டியுள்ளார். காணிகள் கையளிக்கும் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த விடயம் துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரி தலைமையில வளலாயில் காணிகளை மீள கையளிக்கும்...

சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்க முயற்சி! அரசின் பங்காளிக் கட்சிகள் சீற்றம்

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றிக் கடனாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி, சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்க மைத்திரி ரணில் அரசு முயற்சிக்கின்றது என்று தெரிவித்து அதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள், முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என்றும்...

இரு மொழிகளிலும் தேசிய கீதம்

வளலாயில் நடைபெற்ற பொதுமக்களுக்கான காணிகள் வழங்கும் நிகழ்வில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் ஒரே நேரத்தில் இசைக்கப்பட்டது. வளலாய், வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திங்கட்கிழமை (23) வளலாய் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்...

காணி விடுவிப்பு இப்போது ஆரம்பமே! இனி அது தொடரும் என்கிறார் ஜனாதிபதி

தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பயம்,பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்குவதன் மூலமே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தமுடியும். தமிழ் மக்களிடத்திலிருக்கும் பயம், பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்கவேண்டுமாயின் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதை நாம் உணர்வோம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. வயாவிளானில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதியில் பொதுமக்களது காணிகள்...

காணி கையளிப்பு : ஜனாதிபதி, பிரதமர், சந்திரிகா பங்கேற்பு!

வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (23) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பல பிரமுகர்கள்...

மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ். நவீன சந்தையில் கடமையாற்றும் மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு செய்வதால் நவீன சந்தைக்கடைகள் திறக்கப்படவில்லை. யாழ். நவீன சந்தைப்பகுதியில் கடந்த 21ஆம் திகதி யாழ்.வர்த்தக சங்கத்தலைவர் என்.ஜெயசேகரம், யாழ்.மாநகர சபை ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும் இதற்கு அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் தாக்குதலுக்குள்ளான ஊழியருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் எனக்கோரியும் இந்த...

இரட்டை குடியுரிமைக்கு இன்றுதொடக்கம் விண்ணப்பிக்கலாம்!

இலங்­கையில் நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்னர் இன்று முதல் இரட்டை குடி­யு­ரிமை விண்­ணப்­பங்­களை மேற்­கொள்ள முடியும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பொது­மக்கள் ஒழுங்­குத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க இதனை அறி­வித்­துள்ளார். இரட்டை குடி­யு­ரி­மைக்­காக இது­வரை சுமார் 300 பொது­மக்கள் விண்­ணப்­பித்­துள்­ளனர். இவர்­களின் விண்­ணப்­பங்­களும் புதிய விண்­ணப்­பங்­க­ளுடன் பரி­சீ­லிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார். இரட்டை குடி­யு­ரிமை விண்­ணப்­பங்­க­ளின்­போது வயது வந்­த­வர்­க­ளுக்கு 250,...
Loading posts...

All posts loaded

No more posts