Ad Widget

மருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்

மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பழமைவாய்ந்த மூல விக்கிரகம் உட்பட பல விக்கிரகங்கள், நேற்று திங்கட்கிழமை (23) இரவு மாயமாகியுள்ளதாக ஆலய வழிபடுவோர் சங்க உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மருதடி விநாயகர் ஆலயம், கடந்த 2004ஆம் ஆண்டு புனருத்தானம் செய்யப்பட்டு 250 மில்லியன் ரூபாய் செலவில் கருங்கல் ஆலயமாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

பழைய விக்கிரகங்களை பாலஸ்தானம் செய்து அகற்றி புதிய விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையிலேயே மேற்படி பழைய விக்கிரகங்கள் காணாமல் போயுள்ளன.

பிள்ளையார், சிவன், பார்வதி, சண்டேஸ்வரர், நவக்கிரகங்கள் உட்பட பல விக்கிரகங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts