மனித உரிமை மீறல்களை தடுக்கவும்: ஜூலி பிஷப்பிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

இலங்கையில் குறிப்பாக வடக்கில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ நெருக்குவாரங்கள், மற்றும் சட்டவிரோதமான குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன. இவைகளை தடுத்துநிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். (more…)

உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜர்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் (ஈ.பி.டி.பி) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. (more…)
Ad Widget

கை கொடுக்கும் நண்பர்கள் யாழில் அங்குரார்ப்பணம்

கைகொடுக்கும் நண்பர்கள் என்ற தொனிப்பொருளிலான சுமித்திராயோ தொண்டர் நிறுவனத்தின் யாழ்ப்பாணக்கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வும் அலுவலக திறப்பு நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. (more…)

சாரதிப் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை ; இலங்கையில் தமிழ் மொழி மூலமான பயிற்சி யாழில்

இலங்கை சாரதிகள் பயிற்சிப் பாடசாலைகள் சங்கங்கத்தினால் வீதிச் சட்டங்களுக்கு அமைவாக சாரதிப்பயிற்சிப் பாடசாலைகளில் எவ்வாறு சாரதிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்பது தொடர்பில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த சாரதிப் பயிற்சிப் பாடசாலைகளின் பயிற்றிவிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. (more…)

எரியுண்ட மாணவி உயிரிழப்பு

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். (more…)

கண்ணிவெடியில் சிக்கி இளைஞர் பலி

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது என பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. (more…)

பிரதேச அபிவிருத்தியில் ஒன்றிணைந்து செயற்படத்தயார் – தவிசாளர் பிரகாஷ்

வேறுபாடுகள் இல்லாமல் எங்கள் பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஒன்றிணைந்து செயற்படத்தயாராக இருக்கின்றோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ….

தாக்குதல் சூத்திரதாரிகளின் புகைப்படங்களை அடையாளம் காட்ட வைத்தியர் மறுப்பு: காது, மூக்கு, தொண்டை வைத்திய வைத்திய நிபுணரின் தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிலரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்ட நிலையில் வைத்தியர் அடையாளம் காண்பிக்க தவறுகின்றதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல்; ஆதாரங்கள் கிடைக்கவில்லை: டீ.ஜ.ஜி

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்;ற நிலையில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி: நாவந்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம் நாவந்துறைக் கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)

பணத்துடன் காணாமல் போயுள்ள மனைவியைத் தேடும் கணவர்! வடமராட்சியில் சம்பவம்

வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களை கண்காணித்தல் பற்றிய கலந்துரையாடல்

அரசு அல்லாத நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசு நிறுவனங்கள் ஒவ்வொரு திட்டமும் கண்டிப்பாக அங்கீகாரம் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் ஜிஏ. சந்திரசிறி அவர்கள் வலியுறுத்தி உள்ளார். (more…)

இடது காலுக்கும் வலது காலுக்கும் வித்தியாசம் தெரியாத வைத்தியர்!

இடது காலிலுள்ள கட்டியென்றை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளச் சென்ற 9 வயது பாடசாலை மாணவன் ஒருவருக்கு வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியரொருவர். இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இவ்வனர்த்தம் கோப்பாய் வடக்கு இலகடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான இராசதுரை திருவானந்தத்தின் மூன்றாவது மகனான கயலக்ஷன் என்ற பாடசாலைசாலை சிறுவனுக்கே...

கனகரத்தினம் மகாவித்தியாலயத்தின் அதிபர் நியமனம் தொடர்பான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது

கனகரத்தினம் மகாவித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக சென்.ஜேம்ஸ் மகளிர் கல்லூரி அதிபரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

புனரமைப்பின்றி காணப்படும் யாழ். பண்ணை முத்தமிழ் அரங்கம்

யாழ். பண்ணையில் அமைந்துள்ள முத்தமிழ் அரங்கம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

யாழில். 9 1/2 மணித்தியாலயங்கள் மின்தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 1/2 மணித்தியால மின்தடை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. (more…)

72 அடி ஆஞ்சநேயர் சிலை திறப்பு

இந்திய சிற்பக் கலைஞர் புருஷேத்மன் தலைமையிலான குழுவினரால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமைக்கப்ப்பட்ட சிலை நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 72 அடி உயரமான இந்த ஆஞ்சநேயர் சிலை, ஆலயக் குருக்கள் சுந்தரேஸ்வரக் குருக்களினால் திறந்துவைக்கப்பட்டது.

திருமண வைபவத்திற்கு சென்றவர்களை இடித்து தள்ளியது பட்டாரக வாகனம்! 3 பேர் படுகாயம்

திருமண வைபவத்திற்கு சென்று கொண்டிருந்த மூச்சக்கர வண்டியை பட்டாரக வாகனம் ஒன்று இடித்து தள்ளியதில் மிகவும் மோசமான நிலையில் மூச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

இந்திய மீனவரின் அத்துமீறல் எமது வாழ்வாதாரத்தில் வீழ்ந்த பேரிடி:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்திய மீனவரின் அத்துமீறலானது எமது வாழ்வாதாரம் மீது பேரிடியாக வீழ்ந்துள்ளது. இந்த அத்துமீறலானது எமது கடல் வளங்களை தினமும் சுரண்டுவது மட்டுமல்லாமல் எமது கடற்றொழிலாளரின் ஜீவனோபாயத்தையே சீரழித்துள்ளது. இந்திய ரோலர்களின் அத்துமீறல் தடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

புனர்வாழ்வு பெற்றவர்களின் நலனைக் கவனிக்க யாழில் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். மாவட்டத்திற்கான இந்த புதிய அலுவலகம் திறந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வைபவ ரீதியாக திறந்து...
Loading posts...

All posts loaded

No more posts