- Saturday
- July 19th, 2025

தமது வீடுகளை உடைக்க வேண்டாம் என்று படையினரிடம் கெஞ்சியபோதும் தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக வலி.வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் முறைப்பாடு செய்தனர். (more…)

சனசமூக நிலையங்கள் ஊடாக அபிவிருத்தியை முன்னெடுத்தல்' என்ற கருப்பொருளில வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

யாழ். மாநகர சபைக்கு புதிய சுகாதார பணியாளர்களை நியமிப்பதற்கு ஆணையாளர் செ.பிரணவ நாதனினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை 14 வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் 2013 ஆம் ஆண்டிற்கான முதலாவது மாதாந்த பொதுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ். மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது, யாழ்.மாநகர ஆணையாளர்...

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்தார். நேற்றைய தினம் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் 7 பிள்ளைகளின் தந்தையாரான 51 வயதுடைய சின்னத்தம்பி இராஜசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ். மாவட்டத்தில் 2966 படகுகளுக்கு எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)

வட மாகாண அஞ்சல் அதிகாரிகளுக்கு வருடாந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள வரணிப் பகுதியில் 9 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய இளைஞன் சிறுமியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளார். பெணடிக் வீதியைச்சேர்ந்த 21 வயதான நபரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார். (more…)

வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்படுவதாக பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் முறையிட்டுள்ளனர். (more…)

கிழக்கில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு வெள்ள நிவாரணம் ஒன்றை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. (more…)

புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்படுகின்ற கடன் திட்டத்திற்கு இதுவரை யாழ் மாவட்டத்தில் 895 பேர் விண்ணப்பித்துள்ளதாக புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான நிலையத்தின் இணைப்பு அதிகாரி மேஜர் ஜெகத்குமார தெரிவித்தார். (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் 30.01.2013 புதன்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு பெற்றவர்களிற்கான பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயத்தின் இணைப்பாளர் மேஜர் ஜெகத் குமார தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை இழிவானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ். கந்தரோரடை இக்கிராயன் குளத்தில் விளையாடச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் குளத்திலிருந்து சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார். (more…)

வீட்டுக்கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். (more…)

தனதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட அவதூறுச்செய்திக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடுத்த ஆயிரம் (1,000) கோடி ரூபா கோரும் மானநஷ்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. (more…)

All posts loaded
No more posts