Ad Widget

“வாழ்வெழுச்சி மனைப்பொருளாதார திட்டத்தின்” கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

a2(14)பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடத்தும் ‘வாழ்வெழுச்சி மனைப்பொருளாதாரத் திட்டத்தின்’ கீழ் பயிற்சி பெற்றவர்களுக்க்ன உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.

‘வாழ்வெழுச்சி மனைப்பொருளாதார திட்டத்தின்’ கீழ் தெரிவு செய்யப்பட்ட 216 பயானாளிகளுக்கு பனை அபிவிருத்திச்சபை மற்றும் அருங்கலைகள் பேரவை ஆகியன பயிற்சிகளை வழங்கியிருந்தது. இவ்வாறு பயிற்சிகளைப் பெற்றவர்கள் பயிற்சியின் அடிப்படையின் தங்கள் வாழ்வாதாரத்தை தாங்களே மேம்படுத்தும் நோக்கில் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பனை அபிவிருத்திச்சபை முகாமையாளர், அருங்கலைகள் பேரவை உத்தியோகஸ்தர்கள், யாழ். மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன், நல்லூர் பிரதேச செயலக உதவிச் செயலர் சுபாஜினி மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts