Ad Widget

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இராணுவம், பொலிஸுடன் இணைந்துள்ளனர் (செய்தித்துளிகள்)

R01‘குற்றச்செயல்களில் ஈடுபவடுபவர்கள் இராணுவத்துடனும் பொலிஸாருடனும் சேர்ந்திருப்பதினால் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் தெரிவிப்பதற்கு தயக்கமாக இருக்கிறது’ என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவிடம் யாழ்ப்பாண பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முரண்பாடுகளைத் தீர்த்தல் என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

எமது பிரதேசத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அதனோடு சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யும் போது அவர்களைக் பொலிஸார் முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்கின்றார்கள்.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் இரண்டு நாட்கள் கழித்து விடுதலையாகி மாலை நேரங்களில் இராணுவத்தினருடனும் பொலிஸாக்ருடனும் சேர்ந்திருப்பதால் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு தயக்கமாக இருக்கின்றது என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸாரிடம் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்களில் அந்தந்த பிரதேசத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களிடம் முறைப்பாடுகளை இரகசியமான முறையில் பதிவு செய்யுமாறு பொதுமக்களிடம் தெரிவித்தார்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடமையாற்றுகின்றோம்: கிராம அலுவலர்கள்

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே நாங்கள் கடமையாற்றி வருகின்றோம்’ என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்கவிடம் கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

‘யாழ் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வைத் தடுக்க முயற்சித்த கிராம அலுவலர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

ஒரு அரசை சொத்ததை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த கிராம அலுவலர் தாக்கப்பட்டுள்ளரே தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை. இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் அரச உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும்’ என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என்றும் இந்த கிராம அலுவலர் மீதான தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

வடக்கில் காணி பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்

இங்குள்ள காணி தொடர்பான பிரச்சனையை நான் நன்கு அறிவென் அதனைத் தீர்ப்பற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது இதன் வரையறையை கூற முடியாது.

பொது மக்களிடம் காணப்படுகின்ற காணி தொடர்பான பிரச்சினைளுக்கு காணி தொடர்பான மக்கள் சபை ஒன்றை நிறுவி பட்டதாரி பயிலுனர்கள் அந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து பிரதேச செயலகத்திற்கு அறிக்கையிடுவதன் மூலம் அவற்றைத் தீர்த்து வைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் பிரதேச சபைகள் தங்கள் பகுதிக்குட்பட்ட வீதிகளை புனரமைக்கும் போது அதன் மூலப்பொருட்களை தாங்களே கொள்வனவு செய்து திருத்த வேலைகளுக்கான கூலிகளாக இராணுவத்தினரையும் பொலிஸாரையும் பொதுமக்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது கூலிக்குரிய செலவீனம் குறையும் போது நீண்ட தூரமான வீதியை புனரமைக்க முடியும் என்று கேட்டுக்கொண்டார்.

அரச செயலகங்களில் சிறுவர் விடயங்களைக் கையளும் உத்தியோகஸ்தர்கள் சிறுவர்கள் பெண்கள் தொடர்பான விடயங்களில் கூடிய கவனம் செலுத்துவதோடு மக்கள் மத்தியில் இறங்கி செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கொடுக்காமல் ஏனைய கலை கலாச்சார செயற்பாடுகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி

‘முரண்பாடுகளை தீர்த்தல்’ எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல்

Related Posts