Ad Widget

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் – சுவாமிநாதன்

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், திங்கட்கிழமை (23) தெரிவித்தார்.

வளலாய், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படும் 430.6 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வளலாய் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

‘புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது. சில தடங்கல்கள் மற்றும் சிறிய பிரச்சினைகள் இருக்கலாம். அதனை நாங்கள் ஊதி பெரிய பிரச்சினையாகக் காண்பிக்கக்கூடாது. இதனை ஊடகங்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.’

‘நாங்கள் கூறியது போல, 1000 ஏக்கர் காணியையும் விடுவிப்போம். தற்போது 400 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம். அடுத்து படிப்படியாக மிகுதி நிலங்களை விடுவித்து ஏப்ரல் மாத இறுதிக்குள் 600 ஏக்கர் காணியையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

Related Posts