Ad Widget

மந்த கதியில் மீள்குடியமர்வு : அமைச்சர் விஜயகலா குற்றச்சாட்டு

காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கை அரசால் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

காணிகள் கையளிக்கும் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த விடயம் துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரி தலைமையில வளலாயில் காணிகளை மீள கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையிலே,

2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் மக்கள் தங்கள் காணிகள் விடுவிக்கப்படும் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் முன்னைய அரசு உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்கள் காணிகளை சுவீகரித்தது.அத்துடன் சுவீகரித்த பகுதிகளிலுள்ள மக்களின் வீடுகள்,ஆலயங்கள்,பாடசாலை என்பன தரைமட்டமாக்கியது. அது தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களாகவே இருக்கின்றது.

இதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில், புதிய அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்.தமிழ் மக்களின் நம்பிக்கையை புதிய அரசு காப்பாற்ற வேண்டும். காணிகள் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts