உயிருக்கு பயந்தே ராமேஸ்வரம் வந்தோம். ஈழ அகதிகள் உருக்கம்

விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். Read more »

கிளிநொச்சியில் எழுச்சியுடன் நிகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா

கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா நேற்று வியாழக்கிழமை (01-05-2014) எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. Read more »

கிளிநொச்சியில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி அறிவியல் நகரில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2014) வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் திறந்து வைத்துள்ளார். Read more »

முத்தையன்கட்டில் ஏற்று நீர்ப்பாசனப் புனர்நிர்மாணப் பணிகள்

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் வித்தியாபுரம் விவசாயக் குடியிருப்புக்கு நீர் விநியோகிப்பதற்கான புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. Read more »

போராளிகளை குடும்பத்துடன் பதவியா முகாமுக்கு அழைத்துச் சென்ற படையினர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. Read more »

மற்றுமொரு சிறுமி தாயாருடன் கைது!

வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்ற 42 வயதுடைய தாயாரும், அவருடைய மகளாகிய யதுர்சினி என்ற 16 வயது பாடசாலை மாணவியும் புதன்கிழமை இரவு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »

முன்னாள் புலிகள் இராணுவம் மோதல்: கோபி மரணம்?

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. Read more »

இரணைமடுக் குடிநீர்த் திட்டத்தின் பின்னால் உள்ள அரசியல் ஆபத்தானது – பொ.ஐங்கரநேசன்

அரசின் அபிவிருத்தித்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோவொரு அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தின் பின்னாலும் அரசியல் உள்ளது. Read more »

மாகாண நிர்வாகத்துக்கு மத்திய அரசாங்கம் இடையூறு செய்கிறது – பொ.ஐங்கரநேசன்

வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவசாய அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் கீழ் ஒரு மாகாண விவசாயப் பணிப்பாளரும் ஐந்து பிரதி விவசாயப் பணிப்பாளர்களும் உள்ளார்கள். Read more »

பரீட்சை கட்டணத்தை செலுத்த முடியாது தண்டனைக்கு உட்பட்டதாலேயே திருடினோம் – சிறுவர்கள் சாட்சியம்

கிளிநொச்சி பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தான். Read more »

வெள்ளை வானில் வந்தவர்களால் ஒருவர் கடத்தல்!, வன்னியில் தொடருகின்றது பதற்றம்

புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். Read more »

தர்மபுரத்தில் கைதான தாய் தடுப்புக் காவலில்! மகள் விடுவிப்பு

கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more »

காணாமற்போனோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது?

காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயும் மகளும் நேற்று கிளிநொச்சியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

கிளிநொச்சியின் பாதுகாப்பிற்கு படையினரின் காவல் நாய்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், பாதுகாப்பு பணிகளுக்கு நூற்றுக்கணக்கான நாய்களைப் பயிற்றுவித்துள்ளனர். Read more »

வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள Read more »

இரணைமடு குளத் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை கோருகிறது வட மாகாண குழு

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனமாகிய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருக்கின்றனர். Read more »

மேலும் 44 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைவு

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். Read more »

கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து – விவசாய அமைச்சர்

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது Read more »

முத்தையன்கட்டின் விவசாய அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறாக உள்ளது – விவசாய அமைச்சர்

போருக்குப் பிறகு முத்தையன்கட்டில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் பரப்பளவுள்ள அலுவலக வளாகத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. Read more »

இரணைமடுத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் பாதக விளைவுகள் ஏற்படும்’ – இரா.சம்பந்தன்

இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை Read more »