Ad Widget

புலிகளை அழித்தது யார்? பாரூக்கின் கருத்துக்கு கூட்டமைப்பு கண்டனம்

விடுதலைப் புலிகளை இருந்த இடம் தெரியாது அழித்தது ´அல்லா´ தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி ஆற்றி உரையை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். (more…)

வடமாகாண இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிக்க திட்டம்: தளபதி

வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்' என்று இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். (more…)
Ad Widget

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

கடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் கைவிடப்பட்டுள்ளது. (more…)

முல்லைத்தீவில் ஹர்தால்

முல்லைத்தீவு நகரில் இன்று புதன்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. (more…)

சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி முல்லையில் மூன்று மீனவர்கள் உண்ணாவிரதம்

முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இன்று காலை முதல் முல்லை. மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

இராணுவ கோப்ரலை கரம்பிடித்த தமிழ் யுவதி

முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். (more…)

மணலாற்றில் புதிய சிங்கள கிராமம்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு பிரதேசத்தில் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

கேப்பாபிலவில் பெரும் இராணுவக் குடியிருப்பு; 2,000 ஏக்கர் காணியில் 4,000 குடும்பங்களை குடியேற்றத் திட்டம்

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் 4 ஆயிரம் இராணுவக் குடும்பங்களைக் குடியமர்த்துவதற்காக 2 ஆயிரத்து 26 ஏக்கர் காணியைச் சுவீகரிப்பதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. (more…)

இரணைமடு விமான ஓடுதளத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்று முன்னர் இரணைமடு விமான ஓடுதளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். (more…)

அரசுக்கு எதிராக முல்லையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது. (more…)

உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை கிளைக்காரியாலயம் மற்றும் பத்திரிகை விநியோகத்தர்கள், விநியோக வாகனம் ஆகியவற்றின் மீது இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. (more…)

நாயாறு சென்ற தமிழர்கள் விரட்டியடிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலில் தமது நேர்த்திக் கடன் செலுத்தச் சென்ற தமிழ் மக்களை "இங்கே வர வேண்டாம் ஓடிப் போங்கள்'' என்றவாறு இராணுவத்தினர் விரட்டியடித்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். நாயாறுப் பாலத்துக்கும் கொக்குத்தொடு வாய்க்கும் இடையிலுள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலுக்கு பங்குனி உற்சவத்தை...

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி, கிழக்கு பகுதிகளுக்கு 4 பாதுகாப்பு தலைமையகங்கள் தேவை: இராணுவம் பரிந்துரை

உள்நாட்டு போரின் போது இலங்கை தமது சொந்த ஒழுங்கு நடைமுறை ஒன்றை கைக்கொள்ள வேண்டும் என்று இலங்கை இராணுவம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. (more…)

கிளிநொச்சி சம்பவம்! அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்!- சிறிதரன் குற்றச்சாட்டு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். (more…)

கொழும்பு வந்த இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு வரவேற்பு!

டக்ளஸ் தேவானந்தா தலையீட்டால் சிங்கள மொழி கற்பித்தல் பிரச்சினைக்குத் தீர்வு!- மு.சந்திரகுமார்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி பயிற்றுவிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள மொழி பயிற்றுவிப்பதற்காக நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்துள்ள செய்திகளை அடுத்து இந்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ்...

வட-இலங்கை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)