Ad Widget

யாரையும் வற்புறுத்தி இராணுவத்தில் இணைத்துக்கொள்ளவில்லை – சுதச ரணசிங்க

இராணுவத்தில் யாரையும் கட்டாயமாக இணைத்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு யாரும் வற்புறுத்தப்பட்டிருந்தால் தன்னிடம் நேரடியாக முறையிடலாம் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்தார்.

Army-vanni

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று இளம்பெண்களை இராணுவத்திலும், பண்ணை வேலையிலும் இணையுமாறு வற்புறுத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியின் தலைமையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒத்துழைப்பு மையத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“இராணுவத்தில் தமிழ் யுவதிகளை இணைத்து கொள்வது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.

மாதாந்தம் 25000 மேற்பட்ட சம்பளத்தினை பெறுவதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். அத்துடன் இராணுவத்தில் இணைவதற்கு பல பகுதிகளிலும் யுவதிகள் ஆர்வமாக உள்ளனர். எனினும் இப்பகுதி யுவதிகளுக்கு இச் சந்தர்ப்பததை வழங்க வேண்டும் எனற் நோக்குடனேயே தமிழ் யுவதிகளை இராணுவத்தில் சேர்க்கின்றோம்.

இலங்கையில் எந்த பாகங்களிலிருந்தும் இராணுவத்திற்கு ஆட்களை சேர்ந்துக்கொள்ளலாம். குறிப்பாக 25,000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அந்த அடிப்படையிலே கடந்த காலங்களில் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

அடுத்தகட்டமாகவும் இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு யாரையும் வற்புறுத்தி இராணுவத்தில் இணைத்துகொள்ளவில்லை. அப்படி யாரும் வற்புறுத்தியிருந்தால் என்னிடம் வந்து முறையிடலாம். அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறையிடும் பட்சத்தில் நான் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

விவசாய அமைச்சரிடம் கண்ணீர் விட்டழுத இளம் பெண்கள்!

Related Posts