- Wednesday
- August 20th, 2025

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். (more…)

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி பயிற்றுவிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்கள மொழி பயிற்றுவிப்பதற்காக நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்துள்ள செய்திகளை அடுத்து இந்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ்...

இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)