Ad Widget

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி, கிழக்கு பகுதிகளுக்கு 4 பாதுகாப்பு தலைமையகங்கள் தேவை: இராணுவம் பரிந்துரை

Sri_Lanka_Army_Logoஉள்நாட்டு போரின் போது இலங்கை தமது சொந்த ஒழுங்கு நடைமுறை ஒன்றை கைக்கொள்ள வேண்டும் என்று இலங்கை இராணுவம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்ட ஒழுங்குகள், உள்நாட்டு போர் ஒன்றின் போது ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்தை தடுக்கும் வகையில் அமையவில்லை என்று இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைகள் தொடர்பில் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு போர் ஒன்றின்போது கைக்கொள்ள வேண்டிய ஒழுங்குகள் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் உரிய விதிகள் இல்லை என்றும் இராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விடயங்களில் பொலிஸார் மாத்திரமே தலையிட வேண்டும் என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள இலங்கை இராணுவ அறிக்கையில், இலங்கையில் பொலிஸ்படை பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் வருகிறது.

அத்துடன் பயங்கரவாத மற்றும் மற்றும் வன்முறைகள் போன்ற விடயங்களில் பொலிஸாருக்கு உரியமுறையில் செயற்படமுடியாது என்று குறிப்பிட்டுள்ளது. ஏனைய நாடுகளில் பொலிஸ் படை உள்துறை அமைச்சின்கீழ் உள்ளது.

அதேநேரம் பாரிய வன்முறைகளை கையாளும் போது அந்த பொலிஸ் படை தோல்விக்கண்டுள்ளமையையும் இராணுவ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளமை சரியான தீர்மானமாகும்.

நாட்டின் எந்த பகுதியிலும் இராணுவம் நிலைகொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில், பாதுகாப்பு கருதி இது அவசியமானது என்றும் இராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களுக்கு குறைந்தளவு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் உயர்பாதுகாப்பு வலயங்களில் உள்ள பொதுமக்களின் சொத்துக்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி மற்றும் கிழக்கை மையமாகக்கொண்டு 4 பாதுகாப்பு தலைமையகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று இராணுவ அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Posts