- Wednesday
- November 19th, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும்...
பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் நாள் திறந்து...
யாழ். மருத்துவ சங்கத்தின் உதவியுடன் மேற்க்கொள்ளப்பட்டு வந்த மருத்துவ முகாம்கள் நிர்வாக குளறுபடிகள் காரணமாக இடைநிறுத்தம் செய்யப்படகின்றன என யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத் தலைவரும் சமுதாய மருத்துவ நிபுணருமான முரளி வல்லிபுரநாதன் அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: யாழ். மருத்துவ சங்கம் வடக்கு...
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முகமாலை, இத்தாவில் ஆகிய பகுதிகளில் ஏ-9 வீதிக்கு வடக்கேயுள்ள வெடிபொருட்கள் முற்றாக அகற்றப்பட்ட 1.7 கிலோமீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ப.ஜெயராணி அறிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, பச்சிலைப்பள்ளி...
கிளிநொச்சி உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் ஜெரோசா (வயது 03) என்ற சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனான 14 வயதுச் சிறுவனை 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், கிளிநொச்சி பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார். சிறுவனை பொலிஸார் நீதிமன்றத்தில்...
காணாமல் போய் பின் 28 நாட்களின் பின்னர் உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்ட 3 வயதான ஜெர்சிகா பாலியல் வன்புணர்வுக்குப் பின்னரே கொல்லப்பட்டார் என கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் ஜெர்சிகா என்ற இச்சிறுமி கடந்த ஜூன் 21 ஆம் திகதி நீர் நீர் வாய்க்காலுக்குக் குளிப்பதற்காக...
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சுதந்திர வர்த்த வலையங்கள் அமைத்து நகரங்களில் தொழில்பேட்டை அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். - இவ்வாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் பிரசாரக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை நகர பஸ்நிலையம் முன்பாக நடைபெற்றது....
கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை உருத்திரபுரம் பிரதேசத்தின் வயல் பகுதியில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் சடலத்தின் பெரும் பகுதி அலுகிய நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 21ம் திகதி காணாமல் போன குறித்த...
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை (17) மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறில், கத்திக் குத்துக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தந்தையான ராசலிங்கம் சாந்தரூபன் ( 28 வயது) என்பவர்...
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8...
கிளிநொச்சியில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி காணாமற்போன உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமி தொடர்பான விசாரணையை மேற்வதற்காக சந்தேகப்படும்படியான அலைபேசி இலக்கங்களின் தொடர்புகளை அலைபேசி நிறுவனத்தின் ஊடாக ஆராய்வதற்கு, கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று திங்கட்கிழமை (13) அனுமதி வழங்கினார். சிறுமி கடத்தப்பட்டு பணத்துக்காக...
வவுனியா குருசுட்டகுளத்துக்கும் நெய்னாமடுவுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (10) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கனகராயங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த முஹம்மது நிஜாஸ் மற்றும் புத்தளம் ஆலங்குடாவைச் சேர்ந்த ஏ.எச்.எம். ரியாஸ் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து கன்டர் ரக வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு புத்தளம் நோக்கி சென்ற போது, வாகனம்...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னித் தேர்தல் தொகுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என இளைஞர் கழகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வரும் நிலையில் கூட்டமைப்பு இளைஞர்கள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற...
யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28 ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பூநகரி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது மருத்துவ உபகரணங்கள்...
கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை என திங்கட்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவிகள் மூவரும் திங்கட்கிழமை (06) மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவர்களுடைய பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு...
முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்களை துஷ்பிரயோகம் செய்த குறித்த நபர் அரசியல் கட்சி...
கடந்த மே மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இரணைமடு தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. மேலும், கிளிநொச்சி மாவட்டச்...
தன்னை தவறாக புரிந்துகொண்டிருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை, முல்லைத்தீவிலுள்ள பாரதி இல்லத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் சென்றிருந்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு முகாமாகவே இந்த பாரதி இல்லத்தினை கே.பி. நடத்தி வருகிறார்....
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவற்றை விடுவித்து மீள்குடியேறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான சந்திப்பொன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே மாவட்டச் செயலாளர்...
முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த சுரேஸ் தேவிகா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென அவரது கணவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (29) முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி வங்கியில் பணம் வைப்பிலிடச் சென்ற மனைவி, இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும், கடந்த 7...
Loading posts...
All posts loaded
No more posts
