Ad Widget

கிளி. சிறுமி கொலை : சந்தேகநபரான சிறுவனை நன்னடத்தைப் பாடசாலையில் பராமரிக்குமாறு உத்தரவு

கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் எள்­ளுக்­காட்­டுப்­ பகு­தியில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வய­துச்­சி­று­மி­யி­னு­டைய மரணம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்டு அச்­சு­வேலி நன்­ன­டத்தை பாட­சா­லையில் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்ள 14 வய­துச்­சி­று­வனை தொடர்ந்தும் குறித்த பாட­சா­லையில் எதிர்­வரும் 20ஆம் திகதி வரை வைத்­துப்­ப­ரா­ம­ரிக்­கு­மாறு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் எள்­ளுக்­காடு சக்­தி­புரம் பகு­தியில் சந்­தி­ர­குமார் ஜெருசா என்ற மூன்று வய­துச்­சி­றுமி காணாமல் போன நிலையில் கடந்த மாதம் 19ஆம் திகதி குறித்த சிறு­மி­யென சந்­தே­கிக்­கப்­படும் சடலம் உருக்­கு­லைந்த நிலையில் மீட்­கப்­பட்­ட­துடன் காணாமல் போயிருந்­த­போது சிறுமி அணிந்­தி­ருந்த ஆடையும் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த சிறு­மியின் மரணம் தொடர்­பாக 14 வய­துச்­சி­றுவன் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த சிறு­வனை நேற்று முன்­தினம் 10ஆம் திகதி வரை அச்­சு­வே­லியில் உள்ள சான்று பெற்ற நன்­ன­டத்தைப் பாட­சா­லையில் வைத்­துப்­ப­ரா­ம­ரிக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் 10ஆம் திகதி மன்றில் ஆஜர்­ப­டுத்­திய நிலையில் குறித்த சிறு­வனை எதிர்­வரும் 20ஆம் திகதி வரை குறித்த பாட­சா­லையில் பரா­ம­ரிக்­கு­மாறு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி எம்.ஐ.வகாப்தீன் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதேவேளை குறித்த சிறு­மியின் சட­லத்தின் உடற்பாகங்களும் சிறுமியின் தாயாரது இரத்த மாதிரியும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts