Ad Widget

ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆஸ்திரேலியா பணம் வழங்கியதை நிரூபித்தது இந்தோனேசியா!

ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்ப அதிலிருந்த ஆள் கடத்தல்காரர்களுக்கு 5 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டதை இந்தோனேசியா நிரூபித்துள்ளதாக 'சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த செய்திக்கு ஆதாரமாக ஆள் கடத்தல்காரர்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரகள் வழங்கினர் எனக் கூறப்படும் அமெரிக்க...

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் தொழில் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எத்தகைய கருத்தியல்களை அல்லது தொலைநோக்கைக் கொண்டிருந்த போதும், ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு தாமரைத்தடாக...
Ad Widget

முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்கப்போவதாக மாவை தெரிவிப்பு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டு அவர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரனிடமிருந்து வருகின்ற பதிலையடுத்து, உண்மை நிலைமையை செய்தியாளர்களின் ஊடாகத் தெளிவுபடுத்துவதற்குத்...

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு புதிய வைத்தியர்கள், சேவை நேரமும் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குப் ஒன்பது வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநோயாளர் பிரிவில் 35 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் இதுவரை காலமும் 15 வைத்தியர்களுடன் மாத்திரமே இயங்கி வந்தது. இந்த நிலையில் இன்று 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் புதிய வைத்தியர்களையும் இணைத்து 24 வைத்தியர்களுடன் இயங்கவுள்ளது. இதுவரை காலமும் இரவு...

நாளை முதல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா ஆரம்பம்

ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா நாளைய 17.06.2015 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது. 29.06.2015 திங்கட்கிழமை சப்பறம் 30.06.2015 செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா 01.07.2015 புதன்கிழமை தீா்த்தத் திருவிழா 02.07.2015 வியாழக்கிழமை கொடி இறக்கம் மற்றும் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது. திருவிழாக் காலங்களில் தினமும் மாலை கோவில் முன் கலையரங்கில் கலை...

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முறைப்பாடு

பொதுமக்களிடமிருந்து பெருமளவான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் யாழ். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பி.சஞ்சீவன், கொழும்பிலுள்ள ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் செய்வாய்க்கிழமை(16), முறைப்பாடொன்றை பதிவு செய்தார். அதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் உடனிருந்தார்.

நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: ஒருவர் கைது

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், பிறவுண் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பெருமாள் கோவில் பகுதியில் வைத்து, கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (15) மாலை கைது செய்தனர். நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில்...

யாழில் 7379 பேர் மாற்றுத்திறனாளிகள்!

யாழ் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக 7379 பேர் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 1100 சிறுவர்களும் 1320 பேர் போரால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை நேற்றைய தினம் மாற்றுத் திறனாளிகளை சமூகத்துடன் சேர்ப்பதற்கான செயற்திட்டத்தின் கீழான விசேட செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்ததுடன் குறித்த செயலமர்வில் மாற்றுத்...

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு தொடர்ந்தும் மறியல்

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் திகதி காரைநகர் வலந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து ஒருவரைத்தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவரை கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்தனர். ஐவரும் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளமறியலில்...

4ஆம் மாடியில் சந்­தேக நபர்கள்

மாணவி வித்­தியா படு­கொலை சந்­தேக நபர்கள் ஒன்­ப­து­பே­ரை­யும் 30 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசா­ரிக்க ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நேற்று அனு­மதி வழங்­கிய நிலையில் அவர்கள் ஒன்­பது பேரும் நேற்று மாலை 4.00 மணி­ய­ளவில் கொழும்­புக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­னர். கொழும்பு கோட்­டையில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­திற்கு (நான்காம் மாடி)டபிள்யூ.பீ. என்.ஏ.9960 என்ற...

வித்தியா படுகொலை வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் சிங்கள சட்டத்தரணிகள் ஆஜரா?

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரண விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது சிங்கள சட்டத்தரணிகள் மூவர் மன்றில் ஆஜராகினர். குறித்த சட்டத்தரணிகள் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜராக வந்தனரா அல்லது வேறு காரணங்களுக்காக வந்தனரா என்பது நேற்று விசாரணைகள் நிறைவுறும் வரை தெளிவுபடுத்தப்படவில்லை. இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக கொழும்பில்...

மாகாணங்களின் தேவைகள், அபிலாசைகளை கொண்டே மத்தியஅரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்! – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும்...

பருத்தித்துறையில் இரவு,அதிகாலை வேளைகளில் ஒலிபெருக்கிப் பாவனைக்கு தடை!

பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் நீதி, நியாயாதிக்கப்பகுதிக்குள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஒலிபெருக்கிப் பாவனைக்கு நீதிமன்று தடைவிதித்துள்ளது. பொதுநலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிப்பதாக மாவட்ட நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார். பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடிப் பொலிஸ் பிரிவுகளில் ஆலயங்கள், விசேட விழாக்கள் போன்றவற்றில் அதிகரித்த ஒலியுடன் ஒலிபெருக்கிகள் அலறவிடப்படுவதால் மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் நீதிபதி...

தெல்லிப்பழையில் விறகுவெட்டச் சென்ற இளைஞர்களை கட்டிவைத்து தாக்கிய கும்பல்!

தெல்லிப்பழையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற இளைஞர்கள் மற்றொரு இளைஞர் குழுவினால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஏழாலை, மல்லாகம் பகுதியில் குறிப்பிட்ட சில இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதுடன் மதுபோதையில் கெட்டவார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டு வீதியால் செல்பவர்களை அச்சுறுத்தி...

உள்ளகப் பொறிமுறை உருவாக்கும் விடயத்தில் அனைவருடனும் கலந்தாலோசிக்க ஐ.நா.வேண்டுகோள்

உள்ளகப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து பொறுப்புகூறுவதுடன், நல்லிணக்கத்திற்கான உள்ளகப் பொறிமுறையையும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் செப்ரெம்பர் மாத அமர்வுக்கு முன்னதாக ஏற்படுத்தப்படவேண்டும்...

ஆசிரியர் தாக்கி காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்!

வரணிப்பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் அந்தரங்க உறுப்பில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. இதே இடத்தைச் சேர்ந்த க.கஜிதீபன் (வயது 15 ) என்ற மாணவனே இவ்வாறு காயமடைந்துள்ளார். பாடசாலையில் சிரமதானப்பணி இடம்பெற்ற சமயம் ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவனைத் தாக்கியதிலேயே அவன் காயமடைந்தான் என்று தெரிவிக்கப்பட்டது....

வித்தியா படுகொலைச் சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்களான 9 பேரையும் 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவிற்கமைய ஏற்றுக் கொண்டு இன்றிலிருந்து 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்களை விசாரிக்க மன்று உத்தரவிட்டது. இதேவேளை மன்றின்...

வித்தியா படுகொலை: சந்தேக நபர்களுக்கு ஜீலை 13ஆம் திகதி வரை விளக்கமறியல்

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்கள் 9பேரையும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்கள் 9பேரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.இதன்போதே இவர்கள் எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் உத்தரவிட்டார். இதன் போது...

போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன் – மஹிந்த

தேர்தலில் போட்டியிட்டால் பொதுவான வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். தேசிய பட்டியலில் தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலமான கொளனை கோரளை விகாரையின் விகாராதிபதியின் தேகத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக அங்கு சென்றிருந்த போது அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் போட்டியிடுவதென்றால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவோம். அவரின்...

யாழ்ப்பாணத்தில் உதயமாகும் யாழ் வங்கி !

யாழ்ப்பாண வங்கி (Bank Of Jaffna) என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாங்க் ஒப் ஜப்னா (Bank Of Jaffna) என்னும் பெயரில் இந்த வங்கி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் சிலர் இந்த வங்கியை அமைப்பது குறித்து மத்திய வங்கியுடன் விண்ணப்பித்துள்ளனர். பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வர்த்தக நடவடிக்கைளில்...
Loading posts...

All posts loaded

No more posts