- Thursday
- May 14th, 2026
அண்மைக்காலமாக வௌியாகி வரும் தமிழ் திரைப்படங்கள் சிறுவர்களை இலக்கு வைக்கும் விதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையொன்றும், 'நிதர்சனம்' பத்திரிகை வௌியீடும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் (ADIC) நேற்று (30) வௌியிடப்பட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ் இரண்டு வௌியீடுகளும் நடைபெற்றன. இன்று (01) இடம்பெறவுள்ள...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதம் நேற்றய தினம் ஜெனிவா அமர்வில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் சைட் ராத் அல் ஹூசைன் அறிக்கை தொடர்பில் உரையாற்றிய காணொளி ஔிபரப்பட்டது. இலங்கையில் 2015ம் ஆண்டுக்குப் பின் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வடக்கு...
உலக சிறுவர் தினமாகும் இன்றாகும். உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு சிறுவர் தினத்தின் தொனிப்பொருளானது ´சிறுவருக்கு நட்புறவான சூழல்- உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம்´...
கொழும்பு நகர சபைப் பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகள் என இணங்காணப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தாக்குதலுக்கு உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வேலாயுதம் வரதராஜ் என்பவருக்கு 290 வருடங்களும் சந்திரா ரகுபதி என்பவருக்கு 300 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து...
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று அக்டோபர் 1-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இதையொட்டி, விஜய் ரசிகர்கள்...
கே.எஸ்.ரவிக்குமார் தற்போது கன்னட நடிகர் சுதீப்பை வைத்து ‘முடிஞ்சா இவன புடி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார். சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சுதீப்புக்கு வில்லனாக முகேஷ் திவாரி, சரேத் லோஹித்சுவா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், நாசர்,...
பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகள் நடத்தப் படுவதைத் தடைசெய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை நேரமான காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு இன்னும் சில நாள்களில் முடிவெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை நேரங்களிலும், தனியார் வகுப்புகளை தனியார் கல்வி நிறுவனங்கள்...
போலியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த இளைஞரொருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி கடவுச்சீட்டில் கனடா நாட்டுக்குரிய போலி விசாவும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சாவகச்சேரி - சப்பச்சிமாவடிப் பிரதேசத்தில் வயோதிபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு திங்கட்கிழமை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். வடக்கு மீசாலையை வதிவிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா நவசிவாயம் என்ற 63 வயதுடைய வயோதிபர் நேற்றிரவு முதல் காணாமற்போயிருந்தார். இந்நிலையில், சப்பச்சிமாவடியிலுள்ள மகளின் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனையினை விரைவு படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மாணவியின் மூக்குக் கண்ணாடியினை பயங்கரவாத தடைச்சட்ட பிரிவினரிடம் கையளிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று...
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வாஷிங்க்டனில் நேற்று...
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப் பாவனை குறைவடைந்திருந்ததாக, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், எம்.சீ.விக்ரமசேகர தெரிவித்துள்ளார். வார இறுதியில் இரவு 09.00 மணிக்குப் பின்னர்...
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி அனுமதி - 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தsrilanka law collegeமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில்...
“நானும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சதீஸ் அவர்களும் சந்தித்து இவ்வாறு ஒரு மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். அது இன்று வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது. ‘தினச்செய்தி’யின் பிரதம ஆசிரியர் திரு.கே.ரீ.இராசசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வடக்கின் வல்லவன் விளையாட்டு விழாவில் சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். அப்பொழுது...
தமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையர் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என...
கடந்த வாரம் யாழ்.நகரப் பகுதியில் வைத்து காடைத்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியையின் கணவர் ஒருவர் அநியாயமாக உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் வருமாறு:- புதுமணத்த தம்பதிகளாய் குடும்ப வாழ்க்கையில் இணைந்திருந்த சக...
வடக்கு மாகாணத்தில் போரினால் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடக்கு மாகாணத்தில் போரின் போது காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமொன்றை வடக்கு மாகாண சுகாதார...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சர்வதேச விசாரணையின் மூலமே நியாயம் கிடைக்குமென பிரித்தானியாவின் இல்பேர்ட் வடக்கு தொகுதிக்கான கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான நான் கடந்த 10 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவருவதுடன்...
Loading posts...
All posts loaded
No more posts
