நீதியை வழங்குவதற்குப் பாதையமைக்கும் அமெரிக்கத் தீர்மானம்! – ஜோன் கெரி

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைபானது உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதற்கான ஒரு பாதையை அமைத்துக்கொடுக்கும்'' என்று அமெரிக்கா வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் இரவு...

அரசமைப்பு மாற்றத்தினூடாக மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை! – ஜனாதிபதி

புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி, அதனூடாக நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை மேமம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் அங்குள்ள விகாரையயான்றுக்குச் சென்றார். இங்கு கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...
Ad Widget

விஜய் மிகவும் நல்லவர் – ஸ்ருதிஹாசன்

சிம்புதேவன் இயக்க்ததில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, விஜய் எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம். விஜய் மிகப்பெரிய நடிகர் என்றாலும் அதை...

நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி?

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் சி.கல்யாண் வாங்கியுள்ளார். இந்நிலையில், தெலுங்குக்கும், தமிழுக்கும் அறிமுகமாகும் அகிலை, சூப்பர் ஸ்டார் ரஜினி அறிமுகப்படுத்தி வைக்கப்...

உண்ண உணவில்லை என்றாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்கின்றனர் பட்டதாரிகள்: வடக்கு முதல்வர்

பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்வதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண...

இலங்கை விவகாரம் : வைகோ கைது

மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையை எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றது. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய அமையத்தின் நீதிபதிகள் கொண்ட விசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய கூட்டத்தில், அமெரிக்கா அறிக்கை...

யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை – இருவர் விளக்கமறியலில்

அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ம் திகதி யாழ். நகரப் பகுதியில் வைத்து, ஆசிரியரான சண்முகவேல் மாதவமணிவண்ணன் மற்றும் அவரது மனைவியும் சிலரால் தாக்கப்பட்டனர். இதனால் படுகாயமடைந்த ஆசிரியர் யாழ்....

இலவச நீரிழிவு சிகிச்சை முகாம் :பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பு தேவை!

யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவினர் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தடன் இணைந்து யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அந்தந்தப் பிரிவில் உள்ள சனசமூக நிலையங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒவ் வொரு பிரிவிலும் கண்டறியபடாமல் இருக்கும் நீரிழிவு நோய்,உயர் குருதி அமுக்கம், அதிகரித்த உடற்பருமன்,...

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர்

நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவிக்கு வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியிலிருந்து காயப்பட்ட பொதுமக்களின் மருத்துவ உதவிகளை இவர் மேற்கொண்டிருந்தார். இதேவேளை, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளராக க.நந்தகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலை : பரீட்சையில் சித்தியடையாதோர் விண்ணப்பிக்கலாம்

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கற்று, இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியோர் மற்றும் இறுதிப் பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள், அடிப்படை சித்தி அடைந்தவர்கள் ஆகியோரின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. எனவே, மேற்குறித்த நிலையிலுள்ளவர்கள் அலுவலக நேரத்தில் வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் அறிவித்துள்ளார். இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியவர்கள் மற்றும் இறுதிப் பரீட்சையில்...

வீடு மாறி வீட்டுக்குள் நுழைந்த கடற்படை சிப்பாய்க்கு விளக்கமறியல்

நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார். வீடொன்றுக்குள் அத்துமீறி கடற்படைச் சிப்பாய் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பியதும் தப்பிச் சென்றுள்ளார்....

இலங்கை தொடர்பான வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ!

மக்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தினார் விஜயகலா

நாவற்குழியில் உள்ள அரச காணியில் தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வந்த 12 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். நாவற்குழி ஐயனார் கோவிலடி பகுதியில் அரச காணியினுள் தற்காலிக குடிசைகள் அமைத்து 12 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களை உடனடியாக அந்த...

யாழில் கஷ்ட,அதிகஷ்ட பிரதேசங்களுக்கு ஆசிரியர்களை இடமாற்ற நடவடிக்கை

பல்வேறு காரணங்களைக் கூறி வன்னி மற்றும் தீவகப் பகுதிகளில் கடமையாற்றாது உரிய வயதெல்லையைக் கடந்த ஆசியர்கள் வலிகாமம் பகுதியில் உள்ள கஷ்ட,அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் படவுள்ளதாக வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். வன்னி மற்றும் தீவகக் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பல்வேறு...

சம்பூர் கடற்படை முகாம் பொதுமக்களின் விவசாய நிலத்துக்கு மாறுகிறது!

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து கடற்படை வெளியேறுவதாக கூறியபோதிலும், மக்களின் விவசாய நிலங்களில் கடற்படை முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த மாதம் சம்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படையினரின் வசமிருந்த 40 ஏக்கர் நிலப்பரப்பை மக்களிடம் கையளித்தார். எனினும் குறித்த பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறுவதற்கான முயற்சிகளை...

நாட்டில் இடம்­பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உண்மை அறி­யப்­ப­ட­ வேண்டும்! – இரா.சம்­பந்தன்

ஒரு நியா­ய­மான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வைப்­பெற்று அந்த அர­சியல் தீர்வு பாரா­ளு­மன்­றத்தில் பெரு­பான்­மைப்­ப­லத்­துடன் நிறை­வேற்­றப்­பட்டு நாட்டு மக்­களின் ஆணை­யைப்­பெ­ற­வேண்டும் அது தான் எமது இறுதி இலக்கு. இவ்வாறு எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேற்று தெரி­வித்தார். தொடர்ந்து இவர் கருத்து தெரி­விக்­கையில் - நாட்டில் இடம்­பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உண்மை அறி­யப்­ப­ட­...

“வடக்கின் வல்லவன்” நாவாந்துறை சென் மேரீஸ்

சனிக்கிழமை இரவு மின்னொளியில் இடம்பெற்ற “வடக்கின் வல்லவன் 2015” ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்டப் போட்டியில் வடக்கின் வல்லவனுக்கான பட்டத்தை தனதாக்கிக் கொண்டது யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டுக் கழகம். மின் ஒளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கில்லரி வி.க எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் வி.க மோதியது. மைதானத்தினை சுற்றி நிரம்பிய ரசிகர் கூட்டத்துடன் பிரம்மாண்டமாக...

தேர் திருவிழாவின் போது 16 பவுண் நகைகள் திருட்டு

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது 16 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்திருவிழா சனிக்கிழமை(26) இடம்பெற்றது. இதன்போது பெண்கள் அணிந்திருந்த 7 பவுண், 5 பவுண் தாலிக் கொடிகள் மற்றும் இரண்டு சிறுமிகள் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு...

தம்பதியரைக் காணவில்லை!

மக்கா புனித தலத்துக்கு யாத்திரை சென்ற இரு இலங்கை யாத்திரிகர்களைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த அபூபக்கர் அசீஸ் (வயது 58), ரோஷன் அப்துல் அசீஸ் (வயது 55) தம்பதியினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் இருவரையும் தேடும் பணியை விரைவாக செயற்படுத்தபடுவதாக மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த அப்துல் காதர் தெரிவித்துள்ளார்....

ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்ககை! பான்கீ மூனுக்கு ஜனாதிபதி உறுதி!!

ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரேரணையில் அடங்கிய யோசனைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் எப்போதும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்துள்ளார். மேலும் ஐ.நா. பிரகடனங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும்...
Loading posts...

All posts loaded

No more posts