Ad Widget

நாட்டில் இடம்­பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உண்மை அறி­யப்­ப­ட­ வேண்டும்! – இரா.சம்­பந்தன்

ஒரு நியா­ய­மான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வைப்­பெற்று அந்த அர­சியல் தீர்வு பாரா­ளு­மன்­றத்தில் பெரு­பான்­மைப்­ப­லத்­துடன் நிறை­வேற்­றப்­பட்டு நாட்டு மக்­களின் ஆணை­யைப்­பெ­ற­வேண்டும் அது தான் எமது இறுதி இலக்கு. இவ்வாறு எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேற்று தெரி­வித்தார்.

தொடர்ந்து இவர் கருத்து தெரி­விக்­கையில் – நாட்டில் இடம்­பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உண்மை அறி­யப்­ப­ட­ வேண்டும். அதன் அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பரி­காரம் கிட்­ட­ வேண்டும். அதே­போன்று மேலும், இச்­சம்­ப­வங்கள் தொடர இட­ம­ளிக்கக்­ கூடாது.

இவற்­றுக்கு உத்­த­ர­வாதம் அளிக்கும் வகையில் சகல நட­வ­டிக்­கை­களும் கையா­ளப்­ப­ட­வேண்டும். என்ற ரீதி­யிலேயே ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையில் உரு­வா­கி­யுள்ள நிலையைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. அதன் அடிப்­ப­டையில் தீர்­மா­னங்­களும் அமை­ய­வேண்டும் அதனை நாம் வர­வேற்போம்.

ஐ.நா. மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்கா முன்­வைத்­துள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை கூட்­ட­மைப்பு வர­வேற்­றுள்­ளது. இது தொடர்பில் தங்­களின் கருத்­தென்ன என்று கேட்­ட­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

ஒரு நியா­ய­மான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வைப்­பெற்று அந்த அர­சியல் தீர்வு பாரா­ளு­மன்­றத்தில் பெரு­பான்­மைப்­ப­லத்­துடன் நிறை­வேற்­றப்­பட்டு நாட்டு மக்­களின் ஆணை­யைப்­பெ­ற­வேண்டும் அது தான் எமது இறுதி இலக்கு. அதன்­போது தான் எமது மக்கள் இந்த நாட்டில் பாது­காப்­பா­கவும், சுதந்­தி­ர­மா­கவும், கௌர­வ­மா­கவும், சுய மரி­யா­தை­யு­டனும் வாழக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

இந்த இலக்கை அடைய நாம் வெகு­தூரம் பய­ணிக்­க­ வேண்­டி­யுள்­ளது.. இந்தப் பய­ணத்தில் நாம் எமது கால­டியை நிதா­ன­மாக எடுத்­து­வைக்க வேண்டும். எமது மக்­க­ளுக்கு நீதி கிட்­ட­வேண்டும் அவர்கள் அனு­ப­வித்த துய­ரங்­க­ளுக்குப் பரி­காரம் கிட்­ட­வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக அவர்களின் எதிர்காலத்தில் நிரந்தர மாற்றம் பிறக்க வேண்டும். இவை அனைத்தும் நடந்தால் மாத்திரமே தமிழினம் தலைநிமிர்ந்து வாழும் சூழல் ஏற்படும் என்றார்.

Related Posts