Ad Widget

யாழில் கஷ்ட,அதிகஷ்ட பிரதேசங்களுக்கு ஆசிரியர்களை இடமாற்ற நடவடிக்கை

பல்வேறு காரணங்களைக் கூறி வன்னி மற்றும் தீவகப் பகுதிகளில் கடமையாற்றாது உரிய வயதெல்லையைக் கடந்த ஆசியர்கள் வலிகாமம் பகுதியில் உள்ள கஷ்ட,அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் படவுள்ளதாக வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

வன்னி மற்றும் தீவகக் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பல்வேறு காரணங்களை காட்டி சேவையாற்றாத ஆசியர்கள் அவர்களது வயதெல்லையை கடந்துள்ளனர். எனவே அவர்களது அனுமதியுடன் வலிகாமத்தில் உள்ள கஷ்ட,அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் உரிய வயதெல்லையை கடந்த 82 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களில் ஆண் ஆசிரியர்களின் வயதெல்லை 47 ஆகவும் பெண் ஆசிரியர்களது வயதெல்லை 43 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடமாகாண கல்வி அமைச்சினால் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட கஷ்ட அதிகஷ்ட பாடசாலைகளாக 14 பாட சாலைகள் அங்கீகரிக்கப்படடுள்ளன.

அவற்றில் 5 பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்பட்டவுள்ள குறித்த ஆசிரியர்கள் தெரிவு செய்ய முடியும். அந்த வகையில் உண்மைக் காரணங்களை தெரியப்படுத்துவதற்குரிய படிவங்கள் உரிய ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

அவற்றில் குறிப்பிடப்படும் காரணங்கள் பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையில் அவர்களுக்கு வலிகாமத்தில் உள்ள கஷ்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் இடமாற்றம் வழங்கப்படும். இந்த இட மாற்றம் அடுத்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுல் படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts