Ad Widget

இலவச நீரிழிவு சிகிச்சை முகாம் :பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பு தேவை!

யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவினர் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தடன் இணைந்து யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு அந்தந்தப் பிரிவில் உள்ள சனசமூக நிலையங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒவ் வொரு பிரிவிலும் கண்டறியபடாமல் இருக்கும் நீரிழிவு நோய்,உயர் குருதி அமுக்கம், அதிகரித்த உடற்பருமன், அதிகரித்த கொழுப்புப்படிவு ( கொலஸ்ரோல் ) போன்ற சுகாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிய சனசமூக நிலையங்கள் ஊடாக இலவச பரிசோதனை முகாம்களை அந்தந்த இடங்களில் நடத்தவுள்ளனர்.

தமது பிரிவில் இலவச பரிசோதனைகளை நடத்த விரும்பும் சனசமூக நிலையங்கள் அந்தப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோரை பரிசோதனையில் கலந்து கொள்ள ஒழுங்குகள் மேற்கொண்ட பின்னர், நீரிழிவு சிகிச்சை நிலையம், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அறிவிக்குமாறும், பரிசோதனைத் தினத்தன்று பரிசோதனைக்கு வருவோர் சுமார் 12 மணி நேரத்துக்கு முன்னர் உணவு மற்றும் தேநீர் அருந்தாமல் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறும் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் நடத்தப்படும் இலவச பரிசோதனை முகாம்களில் பெருமளவு நீரிழிவு நோயாளர்கள் இனங்காணப்படுவதால் இந்த நோயினால் பாதிக்கப்படுவோரை ஆரம்பத்திலேயே இனங்கண்டு உரிய சிகிச்சை வழங்கும் முகமாக மேற்கொண்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் முயற்சிக்கு பொது அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts