- Sunday
- May 10th, 2026
பப்புவா நியு கினியில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்புமுகாமில், தாங்கள் எதிர்நோக்கும் நிலைமைகளைக் கண்டித்து தஞ்சக் கோரிக்கையாளர்கள் இரண்டு கூடாரங்களுக்குள் முடங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, மனுஸ் தீவு தடுப்புமுகாமில் நடக்கும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் மனுஸ் தீவு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக...
அனிருத்தின் வளர்ச்சி இமயமலையை விட உயரமாக இருக்கும் போல, இசையமைத்த சில படங்களிலேயே தென்னிந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து விட்டார். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தில் இவரது இசை பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்கும் படத்திற்கு அனிருத்தை தான் இசையமைப்பாளராக புக் செய்துள்ளாராம். அது மட்டுமில்லாமல் கௌதம்...
பொங்கலுக்கு வெளியான ஐ, ஆம்பள இரண்டும் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. தயாரிப்பில் இருக்கும் பிரமாண்டமும், உழைப்பும் கதை திரைக்கதையில் இல்லை என்பதை ஐ படத்தைப் பார்த்தவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அதேபோல் ஆம்பள. சுந்தர் சி.யின் மூன்று மாதத்துக்கு ஒரு படம் பார்முலாவை அவர் மறுபரிசீலனை செய்யும்படி ஆம்பளயின் ரிசல்ட் வலியுறுத்துகிறது. இவைகளுக்கு நடுவே வெளியான ஜீ.வி.பிரகாஷ் நடித்திருக்கும்...
காலி துறைமுகத்தில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக் கப்பலில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்கள் 12 இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை, எவான்ட்...
சபுகஸ்கந்தை - மாபிம பிரதேசத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்ட கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சியசாலையில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மஹர நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, சபுகஸ்கந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை...
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை கொழும்பில் சனிக்கிழமை (17) சந்தித்து கலந்துரையாடும் போதே, விநாயகமூர்த்தி இந்தக்...
6 பந்துகளில் அரைச்சதம், 31 பந்துகளில் சதம் என, ஒரே நாளில் அனைத்து சாதனைகளையும் தென்னாபிரிக்கா அணியின் ஏபி டி வில்லியர்ஸ் முறியடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜொகேனர்ஸ் பேர்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே டி வில்லியர்ஸ் இந்த சாதனைகளைப் படைத்தார். இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டு இலங்கையின்...
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநாவின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.அது இலங்கைக் கெதிரான விசாரணையல்ல குற்றமிழைத்த தனிப்பட்ட நபர்களுக்கெதிரானது என்றார். இலங்கையில் புதிய அமைச்சரவை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல்...
மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை...
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வடமாகாண அபிவிருத்தி சம்பந்தமாகவோ அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவோ புதிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் அவரை வடமாகாண முதல்வர் உத்தியோகபூர்வமாக சந்தித்து உரையாடவுள்ளாரா என கேட்ட போது சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
வடமாகாண பாடசாலைகளுக்கு அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு புதிய ஆளுநரான எச்.எம்.ஜீ.எஸ்.பளிக்ஹக்காரவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின், சனிக்கிழமை (17) தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு அருகில், பாடசாலைகளுக்கு செல்லும் வீதிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். அத்துடன் பாடசாலை நடைபெறும் காலங்களில் ஆசிரியர்கள்,...
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் கடந்த காலங்களில் இருந்த சிலர், நீலப்படையணி என்ற போர்வையில் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் தங்கராசா, சனிக்கிழமை (17) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கு...
வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு...
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாகவே இந்த பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பஸ்ஸில் 36 பயணிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். சம்பவத்தில் எவருக்கும்...
புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடர முடியாத நிலையில் அந்தப் பதவியை பிரதி அமைச்சர்...
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார். அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....
வடக்கு மாகாணத்திற்கு இராணுவ பின்புலம் இல்லாத சிவிலியன் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரின் எதிர்காலச் செயற்பாடுகள் மாகாணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதனூடாக மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி மாகாண சபையையும் சிறந்த முறையில் இயங்குகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் வட மாகாண...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்திடம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கைக்கு வரமுடியால் வெளிநாடுகளில் இருப்பவர்கள், இலங்கைக்கு வந்து செல்வதற்கான அனுமதி உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைப்பதாக யாழ்.வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்தார். யாழ். வர்த்தக சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்...
பருத்தித்துறை நீதிமன்ற சட்டத்தரணி திருமதி உருத்திரேஸ்வரன் விஜயராணி என்பவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை (16) இரவு 8 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று வாள்களுடன் நுழைந்து அட்டகாசம் புரிய முயற்சித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, அந்தக்கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். பருத்தித்துறை வல்லிபுரம் பரியாரி ஒழுங்கையில் அமைந்துள்ள சட்டத்தரணியின் வீட்டுக்குள் வாள்களுடன்...
Loading posts...
All posts loaded
No more posts
