யாழ்-கொழும்பு பஸில் தீ

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாகவே இந்த பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பஸ்ஸில் 36 பயணிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

சம்பவத்தில் எவருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts