Ad Widget

வில்லியர்ஸின் விளாசல்

6 பந்துகளில் அரைச்சதம், 31 பந்துகளில் சதம் என, ஒரே நாளில் அனைத்து சாதனைகளையும் தென்னாபிரிக்கா அணியின் ஏபி டி வில்லியர்ஸ் முறியடித்துள்ளார்.

1703pink4

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜொகேனர்ஸ் பேர்க் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே டி வில்லியர்ஸ் இந்த சாதனைகளைப் படைத்தார்.

இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டு இலங்கையின் சனத் ஜெயசூரிய, 17 பந்துகளில் அரைச்சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இச்சாதனையை 16 பந்துகளில் அரைச்சதம் அடித்து முறியடித்தார் வில்லியர்ஸ்.

தொடர்ந்தும் அதிரடியாக ஆடிய ஏபி டி வில்லியர்ஸ், 31 பந்துகளில் சதம் அடித்து, 2014ஆம் ஆண்டு நியூஸிலாந்தின் கொரி அன்டர்ஸன் 36 பந்துகளில் சதம் அடித்த சாதனையை முறியடித்தார்.

இந்தப் போட்டியில் வில்லியர்ஸ், 59 நிமிடங்கள் மாத்திரமே களத்தில் இருந்து 44 பந்துகளை எதிர்கொண்டு 16 ஆறு ஓட்டங்கள், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 149 ஓட்டங்களை விளாசி, ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில்தென்னாபிரிக்க அணி 439 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை மேற்கிந்திிய தீவுகள் அணி 167 ஒட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்து பெற்றது.

Related Posts