சட்டத்தரணி வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த மர்மகும்பல்

பருத்தித்துறை நீதிமன்ற சட்டத்தரணி திருமதி உருத்திரேஸ்வரன் விஜயராணி என்பவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை (16) இரவு 8 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று வாள்களுடன் நுழைந்து அட்டகாசம் புரிய முயற்சித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்தக்கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பருத்தித்துறை வல்லிபுரம் பரியாரி ஒழுங்கையில் அமைந்துள்ள சட்டத்தரணியின் வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பலைக் கண்டதும் சட்டத்தரணி கூக்குரலிடவே, அயலில் இருந்தவர்கள் ஓடிவர கும்பல் தப்பித்துவிட முயன்றுள்ளது.

கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கிப் பிடித்த அயலவர்கள், அந்நபரை நையப்புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts