Ad Widget

புதிய ஆண்டில் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் : கூட்டமைப்பு நம்பிக்கை

புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது....

வெற்றிலை போட்டால் உடம்புக்கு கேடு! வெற்றிலைக்கு போட்டால் நாட்டுக்கு கேடு!

கிராமங்களில் வாழ்பவர்கள் தங்களுடன் இருப்பதாகவும், நகரங்களிலேயே எதிரணிக்கு செல்வாக்கு இருப்பதாகவும் அரசாங்கம் ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இது அப்பட்டமான பொய். கிராமங்களையும், நகரங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒருசேர ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள். மலரும் புதிய ஆண்டில் எனது இந்த கூற்று உண்மை என சந்தேகமற நிரூபிக்கப்படும். இந்த...
Ad Widget

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனது!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் உள்ளிட்ட நால்வர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த...

சமுர்த்தி குடும்பங்களுக்கு நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசிக்கும் சமுர்த்தி குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை மாவட்டச் செயலகம் ஊடாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் புதன்கிழமை (31) தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, 5 முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்த உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. குடும்பங்களின் அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப...

த.தே.கூ.க்கு எதிராக சுவரொட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ். வடமராட்சி பிரதேசத்தில் புதன்கிழமை (31) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'இரணைமடுவின் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு தரமாட்டோம் கடலில் விடுவோம்' எனக்குறிப்பிட்டு இருவரது படங்களும் சேர்த்து இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. சுவரொட்டியின் கீழ் யாழ்.மக்கள்...

புதிய ஆண்டில் சமூகங்களிடையே நல்லுறவு உருவாக்கட்டும் – முதலமைச்சர்

புதிய ஆண்டில் தமிழ் பேசும் மக்களின் மனங்களின் உற்சாகம் உருவாகவும், அனைத்து சமூகங்களிடையே பரஸ்பர நல்லுறவுகளும் சாந்தியும் சமாதானமும் நிலவவும் இறைவனிடம் வேண்டுவோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில், போரினால் இடம்பெயர்ந்த மற்றும் 2014 ஆம் ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்...

கூட்டமைப்பின் முடிவை மீறி தேர்தலை புறக்கணிக்கிறார் அனந்தி சசிதரன்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் அனந்தியின் இந்தக் கருத்து வந்துள்ளது. வடமாகாண சபையின் கூட்டமைப்பு...

ஜோர்டான் விமானியை எப்படி கொல்லலாம்: ட்விட்டரில் ஐடியா கேட்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

தாங்கள் பிடித்து வைத்துள்ள ஜோர்டானைச் சேர்ந்த விமானியை எவ்வாறு கொலை செய்வது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோர்டானைச் சேர்ந்த விமானி முவாத் அல் கசீஸ்பெஹ்(26) என்ற மாவோஸை பிணையக் கைதியாக பிடித்தனர். விமானப் படை விமானியான அவர் தனது விமானத்தில் கோளாறு...

சமுர்த்திப் பயனாளிகளுக்கு தேர்தல் பிரசாரம்! தடுக்கமுற்பட்ட அரச அதிகாரிகளுக்கு மிரட்டல்!!

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகளை, சமுர்த்தி முத்திரை, வீடமைப்பு திட்டம் வழங்குவதாகத் தெரிவித்து பிரதேச செயலகத்துக்கு அழைத்த சிலர் அவர்களிடம் மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். தேர்தல் பிரசாரம் நடப்பதாக அறிந்துகொண்ட பிரதேச செயலக நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து அரச அதிபருக்குத் தெரியப்படுத்தி, அவரின் அனுமதியுடன் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம்...

சுய மரியாதையோடு வாழவே விரும்புகின்றோம்: மன்னார் ஆயர்

நாம் ஈழத்தை கேட்கவில்லை. மாறாக சுயமரியாதையுடன் வாழ்வதையே விரும்புகின்றோம். என மன்னார் ஆயர் ராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்தார். பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் ஆயரை செவ்வாய்க்கிழமை (30) சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த சந்திப்பு குறித்து ஆயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, 'இந்த நாடு பல இன, சமய,...

சைவ மகா சபையின் ஆன்மீக எழுச்சி பாத யாத்திரை -நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தனர்

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய பாத யாத்திரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த யாத்திரையில் மழையையும் பொருட்படுத்தாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இணைந்துகொண்டனர். சைவ சமயத்தின் ஆன்மீக எழுச்சியாக இந்த பாத யாத்திரை அமைந்திருந்தது. காலை 7.30 மணியளவில் சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்தில் இருந்து ஆரம்பான...

கட்சி மாறிய தம்பதி வீட்டின் மீது தாக்குதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்த கணவன் மனைவியான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை (30) இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகபருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் நடராசா நிறஞ்சன், அவரது மனைவியான பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நிறஞ்சன் ஜெயசாந்தி ஆகியோரது...

மைத்திரியின் கூட்டத்துக்கு சென்றவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!!

யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டுப் பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்கு சென்ற இருவர் மீது கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, வல்லைச் சந்தியில் இலக்கத் தகடு...

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கோரி கடிதம்!

வடமாகாண சபை உறுப்பினர்கள், தமக்கு பாதுகாப்புத் தேவை என்று கோரும் பட்சத்தில் அவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் கோரியுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று புதன்கிழமை (31) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் வடமாகாண சபை...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் திடீரென ஓய்வை அறிவித்தார் டோனி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணித்தலைவர் டோனி திடீரென ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து தனது ஓய்வை அறிவித்தார் இந்திய அணித்தலைவர் டோனி. ஒருநாள், ருவென்ரி-20 போட்டிகளில் கவனம் செலுத்தவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றார். சிறந்த...

‘வடக்கின் அபிவிருத்திக்கு 180 கோடி; சல்மான்கானுக்கு 200 கோடி’

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு 180 கோடி ரூபாய்களை ஒதுக்கிய அரசாங்கம், தேர்தல் பிரசாரத்துக்காக ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு 200 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இதுதான் நாட்டில் தமிழ் மக்களின் நிலை என வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்,...

தமிழ் எழுத்துக்களுடன் நாட்காட்டி

கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த நா.வை.மகேந்திராசா என்ற மின் பொறியியலாளர் தமிழர் எழுத்துக்களுடன் கூடிய நாட்காட்டியை (கலண்டர்) 2015ஆம் ஆண்டுக்கு வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் ஆண்டு 2046 எதிர்வரும் தைத்திருநாளில் பிறக்கின்றது. இதனையே தமிழ்ப் புதுவருடமாகக் கொள்வோரும் உள்ளனர். தமிழ் மாதங்களான சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி,...

மக்களுக்கு பாதிப்பின்றி போர் புரிந்தோம் – பொன்சேகா

யுத்தம் புரிந்த போது மக்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே படை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற, பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்...

வடமராட்சி கிழக்கு காணிப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் காணிப்பிரச்சினை தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (30) கட்டைக்காடு கடற்றொழிலாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட கட்டைக்காட்டு கிராமத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கிவரும் காணிப்பிரச்சினை தொடர்பில் விரிவாக...

நாடு திரும்பியுள்ள வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் கடவுச்சீட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ள வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக செல்லுபடியாகும் கடவுச் சீட்டையும் எடுத்துவருவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளும் 2014 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் காணப்படும் அவர்களது வழமையான வதிவிட முகவரிகளுக்கு அனுப்பி...
Loading posts...

All posts loaded

No more posts