Ad Widget

வடமராட்சி கிழக்கு காணிப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் காணிப்பிரச்சினை தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (30) கட்டைக்காடு கடற்றொழிலாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

vadamarachi 2

இக்கூட்டம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட கட்டைக்காட்டு கிராமத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கிவரும் காணிப்பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, ‘எமது நோக்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளப்புனரமைத்து அபிவிருத்தி செய்வது மட்டுமல்ல. அதற்கும் மேலாக அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பதேயாகும்.

இந்நிலையில், எதிர்காலத்தில் எமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்கள் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் தரும் பட்சத்திலேயே, இது சாத்தியமாகும். இவ்விடயம் தொடர்பில் விரைவில் தீர்வினை பெற்றுத் தரப்படும்’ தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன் உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts