சமுர்த்தி குடும்பங்களுக்கு நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசிக்கும் சமுர்த்தி குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை மாவட்டச் செயலகம் ஊடாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் புதன்கிழமை (31) தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, 5 முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்த உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. குடும்பங்களின் அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Posts