Ad Widget

தமிழ் எழுத்துக்களுடன் நாட்காட்டி

கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த நா.வை.மகேந்திராசா என்ற மின் பொறியியலாளர் தமிழர் எழுத்துக்களுடன் கூடிய நாட்காட்டியை (கலண்டர்) 2015ஆம் ஆண்டுக்கு வெளியிட்டுள்ளார்.

tamil-calander

திருவள்ளுவர் ஆண்டு 2046 எதிர்வரும் தைத்திருநாளில் பிறக்கின்றது. இதனையே தமிழ்ப் புதுவருடமாகக் கொள்வோரும் உள்ளனர்.

தமிழ் மாதங்களான சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை (ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதங்கள்) என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர்களின் படங்களைத் தாங்கியும் இந்நாட்காட்டியை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மீதான ஆர்வத்தால், இவர் தனது பெயரைக் குமரிவேந்தன் எனவும் தனது ஊரை வெற்றிநகர் எனவும் பயன்படுத்தி வருகின்றார்.

நாட்காட்டியைப் பெறவிரும்புவோர் நா.வை.மகேந்திரராசா இல 84, ஜெயந்திநகர் கிளிநொச்சி என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு நாள்காட்டியை பெறமுடியும்.

Related Posts