- Thursday
- May 14th, 2026
தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டுமே, ஆனால், இவரின் கோச்சடையான், லிங்கா படங்கள் தோல்வி இவரை மிகவும் பாதித்துள்ளது. இதனால், அடுத்த படத்தில் கண்டிப்பாக ஹிட் கொடுத்து விட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இவர் அடுத்து அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தில் ரஜினி நடிப்பதில்...
‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அஜித்துக்கு 56-வது படமாகும். சிறுத்தை சிவாவும், அஜித்தும் ஏற்கெனவே ‘வீரம்’ படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்துள்ளனர். தற்போது இந்த புதிய படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை...
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரிடம் பெறப்பட்ட கையொப்பத்தினை வைத்து மோசடி செய்துள்ளதாக அப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக பேரவையிடம் இன்று புதன்கிழமை (06) யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய பேரவை இன்று (06)...
எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் விலை குறைத்த போதும் அதற்கு அறவிடப்படும் வரி குறைக்கப்படாததால் எரிபொருள் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் எரிபொருள் கூட்டுத்தாபனம் 4 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 21...
விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (06) அனுமதியளித்தார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று...
யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலி (ஆடு வெட்டுதல்) தொடர்பான விடயத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனுக்கும் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (05) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதே, இந்தச்...
திருமணமாகாத ஜோடிகள் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணம் செய்வதற்கு தடைவிதிப்பதற்கு ,இந்தோனேசியாவின் அச்சே மாகணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு அச்சே பகுதியில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த புதிய சட்டம், உள்ளூர் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது....
வைத்தியசாலைக்கான வருகையை தவிர்த்து, ஆயருக்காக பிரார்த்தனை செய்யுமாறு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் மக்களை கோரியுள்ளார். திடீர் சுகவீனமுற்ற நிலையில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆயரின் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் வைத்தியசாலையில் அவருக்கு இடையூறு இல்லாதிருக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை...
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் கைது செய்யப்படும் குழுக்களுக்கு பெயர்கள் சூட்டவேண்டாம் என்று வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பிரதிநிதிகள் கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற போது, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமே பிரகாஸ் இவ்வாறு கூறினார். அவர்...
யாழ்ப்பாணம் நகரப் பகுதயில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைகளின முன்பாக போதைப் பொருள் வியாபாரம் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் பாடசாலை முடிவடையும் நேரத்திலும் இடம்பெறுகின்றது. இதற்கெதிராக யாழ்ப்பாணப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர். என யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்ப்பாணப் பிரதேச செயலர் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்...
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் கன மழை (100 மி.மீ மேல்) பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள்கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்ட சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (05.05.2015) நடைபெற்றுள்ளது. வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக்கப்பட்ட வளைவில் இருந்து உள்நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தினுள்வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் உள்ளது. பெரிய வைரவர் ஆலயங்களில் ஒன்று...
யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப்பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். குடாநாட்டு நிலைமைகளை ஆராயும் விசேட கூட்டம் யாழ். அரச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத்...
தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,அரியனேந்திரன் ,பொன் செல்வராசா மற்றும் அமீர் அலியுடனான காரசாரமான விவாதம் உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகிறது.
தனது அடுத்த படமான 'ஓர் இரவு'இல் மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிக்கிறார் கமல் ஹாஸன். உத்தம வில்லன் படத்துக்குப் பிறகு பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய இரு கமல் படங்கள் வெளிவரவுள்ளன. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து விட்டன. ஜூன் மாதமே பாபநாசம் வரவிருக்கிறது. தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால்,...
வல்வெட்டித்துறை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியை சேர்ந்த சிவனடியார் நவரட்ணம் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்;. வல்வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுவருவதால், இவர் அங்கு தண்ணீர் பந்தல் அமைந்திருந்தார். இந்த நிலையில்,வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு முன்பாகவுள்ள வீதிக்கு இவர்...
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராபக்ஷவுக்கான விளக்கமறியல், மே மாதம் 7 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திவிநெகும நிதி மோசடி தொடர்பில் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் விளக்கமறியலும் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கான...
வெதுப்பகம் மற்றும் வெதுப்பக உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும்...
யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக, வீதியில் நின்ற வயோதிபரை கூலர் ரக வாகனம் மோதியதில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். கூலர் ரக வாகனம் மோதியதில் உரும்பிராய் தெற்கு சேர்ந்த சீனியர் ஞானம் (வயது 55) என்பவர் உயிரிழந்தவராவார். இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், கூலர் ரக வாகனத்தை பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர். அவ்விடத்துக்கு...
தனியார் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளிகளுக்கு, வழங்கும் மருந்துகள் மற்றும் பயன்படுத்தும் வைத்திய உபகரணங்களின் விலைகளை குறிப்பிட்டு கட்டணப்பட்டியல் விநியோகிக்கப்படவேண்டும் என்று நுகர்வோர் அதிகார சபை, தனியார் வைத்திய நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது. சில தனியார் வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு வழங்குகின்ற கட்டணப்பட்டியிலில் மருந்து மற்றும் வைத்திய உபகரணங்களின் விலைகள் உண்மையான விலைகளை விடவும் கூடுதலான விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள்...
Loading posts...
All posts loaded
No more posts
