Ad Widget

யாழ். பல்கலை விஞ்ஞான ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரிடம் பெறப்பட்ட கையொப்பத்தினை வைத்து மோசடி செய்துள்ளதாக அப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

jaffna-uni00science

யாழ். பல்கலைக்கழக பேரவையிடம் இன்று புதன்கிழமை (06) யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய பேரவை இன்று (06) ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த பேரவைக்கு யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினால், மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகத்தினை விசாரணை நடத்தி தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமிக்குமாறு கோரியிருக்கின்றார்கள்.

அந்த ஆவணத்தில், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் பலரின் ஒப்பங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டு வேறொரு தேவைக்காக பெற்ப்பட்ட கையொப்பத்தினை இந்த தேவைக்காக பயன்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தினை எதிர்த்து, பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் செய்யக் கூடாத ஒரு செயலை செய்துள்ளது.

அந்த செயலை வெளிப்படுத்தி யாழ். பல்கலைக்கழக பேரவையின் உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் மோசடியினை சரியான விதத்தில் விசாரணை மேற்கொண்டு உண்மையினை வெளிப்படுத்துமாறும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக பேரவையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 250 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதேவேளை, விஞ்ஞான ஆசிரியர் சங்கம் 40 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பல்கலைக்கழககத்தின் குரல் பெரும்பான்மை ஆசிரியர்களின் குரலாக இருக்குமே தவிர, சிறிய சங்கத்தின் குரல் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இலங்கையில் உள்ள பல பல்கலைக்கழகங்களை பார்க்கும் போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெரியளவிலான மோசடிகள் இடம்பெறவில்லை.

தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமிக்குமாறு கோரும் அளவிற்கு பெரிய அளவிலான மோசடிகள் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்கள்.

Related Posts