Ad Widget

எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் விலை குறைத்த போதும் அதற்கு அறவிடப்படும் வரி குறைக்கப்படாததால் எரிபொருள் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் எரிபொருள் கூட்டுத்தாபனம் 4 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 21 ரூபாவும் 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 15 ரூபாவும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆனால் டீசல் விற்பனையில் லாபம் ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்கான வரியை குறைக்குமாறு திரைசேறியிடம் கோரியுள்ள போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அதற்கு மாற்று வழியாக எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என எரிபொருள் கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts